கோவை குண்டு வெடிப்புக்கு திமுக அரசின் அலட்சியம் தான் காரணம்- த.மா.கா. புகார்
சென்னை:
கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து முன் கூட்டியே உளவுத்துறை தகவல் கொடுத்தும் கூட திமுக அரசு அலட்சியமாகஇருந்த காரணத்தால்தான் குண்டுவெடிப்புகள் நடந்தன என தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டசபை எதிர்க் கட்சித்தலைவருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறினார்.
கோவையில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில்1988ம் ஆண்டு மிகப் பெரும் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்தும், விஷமிகளின் சதிச் செயல் குறித்தும் உளவுத்துறை போலீஸார் அப்போதைய திமுகஆட்சிக்கு முன் கூட்டியே தகவல் கொடுத்தனர். மேலும் இதுகுறித்து அப்போதைய பிரதமர் குஜ்ரால் தமிழக முதல்வருக்கும்,அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் அப்போதைய திமுகஆட்சி அலட்சியமாக இருந்துவிட்டது. இதன் காரணமாகவே மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கோயம்புத்தூர் வந்தபோது தொடர் குண்டுவெடிப்புகள்நடந்தது. இதனால் பல உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியதாயிற்று.
இதுகுறித்து கருணாநிதி தான் முதல்வராக இருந்தபோது இதுபோன்ற கடிதம் வந்துள்ளதா என்று பார்த்து, அதற்கானநடவடிக்கையை எடுத்திருந்தால் அந்த அறிக்கையை வெளியிடட்டும்.
கடந்த ஐந்தாண்டுகளில் கோவை மாநகராட்சியில் தமாகாவினரின் செயல்பாடுகள் மக்கள் மனதில் இன்னும் நிற்கின்றன. எனவேஇந்த முறையும் மாநகராட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சியான அதிமுக எளிதில் வெற்றி பெறும் என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications