சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
சென்னை:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா போர் தொடங்கியது. விமானங்கள் மூலம்ஆப்கானிஸ்தான் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது அமெரிக்கா. இதையடுத்து இந்தியாவின் முக்கியநகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
சென்ற வாரம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குண்டு வைத்திருப்பதாகவும், விமானத்தைகடத்தப்போவதாகவும் வந்த தகவல்களையடுத்து சென்னை விமான நிலையத்தில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள், பார்வையாளர்கள் அனைவரும் கடும் சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள். விமான நிலையத்தில்போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு பணிகள் குறித்து, செங்கல்பட்டு டி.ஐ.ஜி, விமான நிலையபோலீஸ் துணை கமிஷனர் ஆகியோரிடம் தமிழக போலீஸ் ஐ.ஜி. பாலச்சந்திரன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கூடுதல் பாதுகாப்பு பணிகளை போலீசார் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்துஅவர்களுக்கு பாலச்சந்திரன் அறிவுரை கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications