நிலக்கரி ஊழல்: ஜெ. மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
சென்னை:
நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு விசாரணைக்கு நேரில் வந்து வாக்குமூலம் அளிக்க முடியாது என்று ஜெயலலிதாமனு தாக்கல் செய்துள்ளதையடுத்து, இதற்குரிய பதில் மனுவை அரசு தரப்பு நாளை (வியாழக்கிழமை) தாக்கல்செய்யுமாறு 3வது தனிநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தபோது, நிலக்கரிஇறக்குமதி செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மீது சென்ற திமுக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு 3வது தனி நீதிமன்றத்தில் நீதிபதி தார்வே முன் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்குதண்டனை வழங்கி தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா அப்பீல் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து,ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்போதைய தி.மு.க. அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த அப்பீல் மனுவைவிசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா நிலக்கரி ஊழல் வழக்கில் வாக்குமூலம் அளிக்க தனி நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஜெயலலிதாவை இன்று (புதன்கிழமை) வாக்குமூலம் அளிக்க தனி நீதிமன்றம் வரவேண்டும் என்று நோட்டீஸ்அளித்திருந்தது. ஆனால் ஜெயலலிதா தன்னால் நேரில் வந்து வாக்குமூலம் அளிக்க முடியாது என்று மனு தாக்கல்செய்துள்ளார்.
இதற்கான பதில் மனுவை அரசு தரப்பு வியாழக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று 3வது தனி நீதிமன்றநீதிபதி தார்வே உத்தரவு பிறுப்பித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications