முஷாரப்-தலிபான் தலைவர் சந்திப்பை தடுத்த ஐ.எஸ்.ஐ.
இஸ்லாமாபாத்:
தலிபான் தலைவர் முல்லா முகம்மத் ஒமருக்கும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கும் நடக்க இருந்தசந்திப்பை பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவர் தடுத்துவிட்டார் என்ற விவரம்இப்போது வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாபரைஅமெரிக்கா நெருக்கியது. இதையடுத்து அவர் நீக்கப்பட்டார்.
ஆனால், இரு வாரங்களுக்கு முன் இவர் தான் பாகிஸ்தான் சார்பாக ஆப்கானதான் சென்று அமெரிக்காவின்கோரிக்கை (பின் லேடனை ஒப்படைப்பது) குறித்து தலிபான்களுடன் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தாக்குதலை தவிர்க்க முயற்சி செய்வதாகக் கூறி மெஹ்மூதைத் தான் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிவைத்தார் பர்வேஸ் முஷாரப்.
ஆனால், இரண்டு முறை ஆப்கானிஸ்தான் சென்று தலிபான் தலைவர் முல்லா ஒமரை சந்தித்துவிட்டுத் திரும்பியஅவர் பின் லேடனை ஒப்படைக்க அவர்கள் மறுப்பதாகக் கூறினார்.
இதையடுத்து முல்லா ஒமரை தானே நேரில் சென்று சந்திக்க பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் திட்டமிட்டார்.ஆனால், ஒமர்-முஷாரப் சந்திப்பை மெஹ்மூத் திட்டமிட்டுக் கெடுத்துவிட்டதாக இப்போது தெரியவந்துள்ளது.
அதிபர் முஷாரப் இப்போதுள்ள சூழ்நிலையில் தலிபானளின் தலைமையகமான காண்டஹார் செல்வதைத்தவிர்க்கவேண்டும் என்று ஐ.எஸ்.ஐ. தலைவர் என்ற முறையில் வலியுறுத்தியுள்ளார். தலிபான் தலைவர் முல்லாஉமரை முஷாரப் சந்திப்பதை இவர் விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
அப்படியே முஷாரப் ஆப்கானிஸ்தான் சென்றாலும் கூட முல்லா உமரைச் சந்திக்கக் கூடாது என்றும், அந் நாட்டுஉள்துறை அமைச்சர் மொய்னுதீன் ஹைதரைத் தான் சந்திக்க வேண்டும் என்றும் மெஹ்மூத் கூறியதாகத் தெரிகிறது.இதன்மூலம் எந்த நிலையிலும் முல்லா உமருடன், முஷாரப் நேருக்கு நேர் சந்திப்பதை அவர் விரும்பவில்லைஎன்பது தெரியவந்துள்ளது.
மேலும் ஐ.எஸ்.ஐ. அனுமதியுடன் தான் முஷாரப் வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சமீபகாலமாகவே முஷாரப்-மெஹ்மூத் மோதல் இருந்து வந்துள்ளது. ஆனால், ஐ.எஸ்.ஐ. தலைவர்களை அந் நாட்டுராணுவ ஆட்சியாளர்கள கூட கேள்வி கேட்க முடிந்தது இல்லை. அந்த அளவுக்கு சுதந்திரத்தோடும்அதிகாரத்தோடும் அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ஆட்சியைப் பிடித்தவுடன் மெஹ்மூதுக்கு முஷாரப் ராணுவப் பணிக்குழுவின் இணைத் தலைவர் பதவியைஅளித்தார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டு, தன்னை ராணுவத் துணைத் தலைவராக்கக் கோரி முஷாரபிடம்வற்புறுத்தியுள்ளார். முஷாரப் தன்னை இரண்டாம் கட்டத் தலைவராக்கப் பார்க்கிறார் என்று எண்ணியிருக்கிறார்.
மேலும் அமெரிக்கா சென்றபோது இவர், அங்கு ராணுவ உயர் அதிகாரிகளுடன் தவறான முறையில் நடந்துள்ளார்.
மேலும் இவர் ஒரு அதிகப்பிரசங்கி என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் வட்டத்தில் பேசப்படுவதுண்டு.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications