ரமேஷ் தற்கொலை வழக்கில் கைதாவாரா ஸ்டாலின்?
சென்னை:
சென்னை தொழிலதிபர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கை போலீஸார் வேறுபிரிவுகளின் கீழ் மாற்றியுள்ளனர். கொலை, கொலைச் சதி, தற்கொலைக்குத் தூண்டுதல்ஆகிய பிரிவுகளின் கீழ்இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
அண்ணாநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ரமேஷ். மேயர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர். இவர் கடந்தஜூலை மாதம் தனது மனைவி, 3 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்தசம்பவம் குறித்து போலீஸார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது ரமேஷ் குடும்பத்தினர் அருந்திய பெப்சியில் சயனைட் விஷம் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து யாரேனும் தற்கொலைக்குத் தூண்டியிருக்க வேண்டும் அல்லது விஷம் குடிக்ககட்டாயப்படுத்தியிருக்க வேண்டும் என்று போலீஸார் சந்கேதித்தனர். இதையடுத்து பல்வேறு கோணங்களில் இந்தசம்பவம் தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டனர்.
ரமேஷின் நெருங்கிய நண்பரான ரெட்டி என்பவர் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ரமேஷுக்குநெருங்கியவர்களாக உள்ள யாரோ கொடுத்த மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்க வேண்டும்என்று கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் ரமேஷின் நெருங்கிய நண்பரான மு.க.ஸ்டாலின் குறித்த தகவல்களைத் திரட்டி வந்தனர்.தற்போது ஸ்டாலினுக்கு எதிராக புதிய வழக்குப் பதிவு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ரமேஷைத் தற்கொலை செய்யத் தூண்டியது ஸ்டாலின்தான் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். ஸ்டாலினுக்குஎதிராக புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ரமேஷ் வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்னும் 3 வாரத்திற்குள் குற்றப்பத்தரிக்கை தாக்கல்செய்யப்படவுள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொள்வார்கள் என்றுதெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications