விஷச் சாராய சம்பவம் - 10 பேர் பார்வை இழந்தனர்
சென்னை:
சென்னை அருகே கோட்டூரில் விஷச்சாராயம் அருந்தியவர்களில் 10 பேருக்கு கண் பார்வை பறிபோனது என்றுஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவீந்திரநாத் கூறினார்.
சென்னைக்கு அருகே உள்ள கோட்டூரில் கடந்த சனிக்கிழமை விசச்சாராயம் அருந்தியவர்களில் ஆண்களும்பெண்களுமாக 36 பேர் பலியானார்கள்.
இவர்களில் இன்னும் 50க்கும் மேற்பட்டோர் சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், ஸ்டான்லிமருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
இவர்களில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 10 பேருக்கு கண் பார்வை பறிபோய்விட்டது என்றுஅம்மருத்துவவமனை முதல்வர் டாக்டர் ரவீந்திரநாத் கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,
ஸ்டான்லி மருத்துவமனைக்கு இதுவரை 74 பேர் சிகிச்சை பெவதற்காக வந்துள்ளனர். அவர்களில் 21 பேர் சிகிச்சைபலனளிக்காமல் மரணமடைந்துவிட்டனர்.
மேலும் 10 பேருக்கு கண்பார்வை மங்கிவிட்டது. இவர்களில் 8 பேருக்கு முழுவதுமாக கண் பார்வை போய்விட்டது.2 பேருக்கு பாதி பார்வை மட்டுடே உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால் இவர்களில்பெரும்பாலானவர்களுக்கு கண்பார்வை காப்பாற்றப்பட்டுள்ளது.
விஷச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் என்ற ரசாயணத்தை அவர்கள் குடித்ததால் இந்தக் கண்பார்வைக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மெதில் புரெடைசான் என்ற மருந்து கொடுக்கப்பட்டு, கண்பார்வைக்குசிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு டாக்டர் ரவீந்திரநாத் கூறினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications