தலிபான் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன - நார்தர்ன் அலையன்ஸ்
லண்டன்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று நார்தர்ன்அலையன்ஸ் பிரிவினரின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா கூறினார்.
இந்நிலையில் தலிபான்களின் படைகளில் பணியாற்றிய 40 தளபதிகள் உட்பட 70 க்கும் மேற்பட்டோர் நார்தர்ன்அலையன்ஸ் பிரிவில் இணைந்துள்ளனர். இதனால் தலிபான்கள் பலம் குறைய ஆரம்பித்துள்ளது.
இன்னும் ஓரிரு வாரங்களில் தலிபான்கள் ஆட்சி முடிவுக்குவந்துவிடும் என்று அப்துல்லா அப்துல்லா கூறினார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கான் வம்சாவழி மக்களையும், இங்கிருந்து நாடு கடத்தப்பட்டவர்களையும்இணைத்து ஒரு தேசிய அரசு அமைக்க நாங்கள் முயன்று வருகிறோம்.
ஆப்கான் ஆப்கானியர்களுக்குத் தான் என்ற கொள்கையைக் கடைபிடித்து அனைத்து ஆப்கானியர்களும் ஒன்றாகஇணையவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். இது நிறைவேற நாங்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும என்று கருதுகிறேன்.
ஆப்கான் மக்களின் சுயஉரிமையைப் பாதுகாக்க அவர்கள் தலிபான்களிடம் இருந்து எதிர்பார்ப்பதைவிடஅதிகமாக நாங்கள் செய்யவேண்டும் என்று நினைக்கிறோம். மேலும் ஐ.நா. சபையில் நாங்களும் பங்குபெறதயாராகிக்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications