எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான்-தலிபான் கடும் துப்பாக்கிச் சண்டை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புகளுக்கும் தலிபான்படையினருக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர்.
வடமேற்கு பாகிஸ்தானின் டொர்மாண்டியில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டை 30 நிமிடங்களுக்கும் மேல் நீடித்தது.
பாகிஸ்தான் தரப்பில் எந்தவித உயிர்ச் சேதமும் இல்லை என்று கூறும் அதிகாரிகள், எத்தனை தலிபான்கள்இறந்தனர் என்பது பற்றிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினர்.
நாவா பாஸ் என்ற எல்லைப் பகுதியிலும் பாகிஸ்தான்-தலிபான் படையினருக்கிடையே கடும் துப்பாக்கிச் சண்டைநடந்ததாகக் கூறப்படுகிறது.
மதவாதிகள் போராட்டம் தீவிரம்
இதற்கிடையே பாகிஸ்தான் முழுவதும் இஸ்லாமிய மதவாதிகள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் உச்சக்கட்டத்தைஎட்டியுள்ளது.
ஆப்கானில் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களை எதிர்த்தும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் கோலின்போவெல் பாகிஸ்தானுக்கு வருவதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
"போவெல் இங்கு வருவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றதாகும். மேலும் அவருடைய கால்பாகிஸ்தான் மண்ணில் படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்றும் போராட்டக்காரர்கள்எச்சரித்துள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொள்ள நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள போராட்டக்காரர்கள், அமெரிக்காதன்னுடைய தாக்குதல்களில் வெற்றியடைய அனுமதிக்கக் கூடாது என்றும் சூளுரைத்துள்ளனர்.
போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே நடந்த சண்டையில் 5 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள்தெரிவிக்கின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications