முட்டை வாங்கிக் கொடுத்தவரைக் கடித்துக் குதறிய குரங்கு
தலைஞாயிறு:
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே முட்டை வாங்கிக் கொடுத்து குரங்கிடம் கடிவாங்கியவர் மயக்கமடைந்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள கீழக்கரையிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காமராஜ்.
இவர் திருமருகல் என்ற ஊரில் பஸ்நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும் போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த2 குரங்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
பிறகு அந்தக் குரங்களின் மீது கரிசனம் கொண்ட காமராஜ், அருகில் இருந்த முட்டைக் கடையில் 4 முட்டைகளைவாங்கி அந்தக் குரங்குகளுக்குக் கொடுத்தார்.
அவ்வாறு ஒரு குரங்கு முட்டையை உடைத்துக் குடித்துக் கொண்டிருக்கும் போது, காமராஜ் அதன் அருகில் சென்றுதலையைத் தடவிக் கொடுத்துள்ளார்.
"முட்டைவாங்கிக் கொடுத்து தன்னைப் பிடிக்கப்பார்க்கிறார்" என்று நினைத்ததோ என்னவோ, திடீரென்று அந்தக்குரங்கு வெறிகொண்டு காமராஜின் கையைப் பற்றிக்கொண்டு கடித்துக் குதற ஆரம்பித்தது.
இதைச் சற்றும் எதிர்பாராத காமராஜ் அலறியடித்துக் கொண்டு ஓடினார். ஆனாலும் குரங்கு அவரது கையைவிட்டபாடில்லை. பிறகு பஸ்நிலையத்தில் இருந்த பொதுமக்கள் குரங்கை அடித்து விரட்டிவிட்டனர்.
இந்த அதிர்ச்சியில் கையில் ரத்தத்துடன் காமராஜ் மயங்கி விழுந்துவிட்டார். பிறகு பொதுமக்கள் அவரை அருகில்உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மயக்க நிலையுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications