For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல்: கடும் சோதனையை சந்திக்கும் அதிமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு கடும் சோதனையைசந்திக்கவிருக்கிறது. இநத் தேர்தல் அதிமுக அரசின் 6 மாத கால ஆட்சியின் மீதானகருத்துக் கணிப்பாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

வரும் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாகநடைபெறவுள்ளது. இதற்கு முன் 1996ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இதில் திமுக அமோக வெற்றி பெற்றது.

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிஅமைத்து 6மாதங்களாகிறது.

சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் ஆகிய 4 மாநகாராட்சிகளிலும், 44நகராட்சியிலும், 307 பேரூராட்சிகளிலும், 195 ஊராட்சிக ளிலும் 16ம் தேதி முதல் கட்டதேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்குமுடிவடைகிறது.

உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமயில் ஒருகூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் 10 கட்சிகள் கூட்டணியும் தேர்தல் களத்தில்உள்ளன.

இது தவிர விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சிகள் ஆகியவை தனித்தனியாக போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் குறிப்பிடத்கக்க அம்சம் திமுக தலைவர் கருணாநிதியும், அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.

உடல் நிலை காரணமாக கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.

முதலில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்தார் ஜெயலலிதா.சென்ற மாதம் 21ம் தேதி ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்படட்டது செல்லாது என்றுஉச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து அவர் முதல்வர் பதவி ரத்தானது. இதன் காரணமாகஅவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமாகாவின் தலைவர்ஜி.கே.வாசன் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கருணாநிதி கைது சம்பவத்தின் போது போலீசர் ஆராஜகமாக நடந்து கொண்டது,ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்தது செல்லாது என்று கூறியது திமுகவுக்கு சாதகமாக அமையும். இதனால்திமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும்.

மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இடையேயான வாக்குவித்தியாசம் 32 லட்சம் தான். தற்போது பாமகவும், திமுக தலைமையிலானகூட்டணியில் இணைத்துள்ளது திமுகவுக்கு பலம் சேர்க்கும் எனவே திமுக வெற்றி உறுதிஎன்று திமுகவினர் கூறிவருகிறார்கள்.

அதிமுகவினர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் சட்டசபை தேர்தல்முடிவைப் போல் எங்களுக்கு சாதகமாகத்தான் அமையும்.

மக்களுக்கு அதிமுக அரசின் மீது எந்த கோபமும் இல்லை. ஜெயலலிதா முதல்வராகநியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது அதிமுகவுக்குசாதகமான அனுதாப அலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலில்அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றனர்.

இரண்டு கட்சிகளும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறுகின்றன,வாக்களர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது 1 வாரத்தில் தெரிந்துவிடும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X