குடம் கொடுத்த குப்பன் கைது
சென்னை:
செங்கல்பட்டு நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் குப்பன்,வாக்காளர்களுக்கு குடம் கொடுத்து வாக்கு கேட்டதாக கூறி அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து280 குடங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செங்கல்பட்டு நகராட்சித் தலைவர் பதவிக்கு மொத்தம் 9 பேர் போட்டியிடுகின்றனர். உறுப்பினர் பதவிக்கு 184பேர் போட்டியிடுகின்றனர்.
பல வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவருவதற்காக சிறு சிறு அன்பளிப்புகளை வழங்கி ஓட்டுக் கேட்டனர்.ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் குப்பன் இவர்களை மிஞ்சி விட்டார்.
அவரது ஆதரவாளர் பழனி என்பவர் ஒரு பெரிய டிரை சைக்கிளில் எவர் சில்வர் குடங்களை எடுத்துக் கொண்டு,இரவில் வீடு வீடாக சென்று இலவச டெலிவரி செய்து குப்பனுக்கு ஆதரவாக ஓட்டுப் போடுமாறு கூறி கேன்வாஸ்செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சுயேச்சை வேட்பாளர் சுப்ரமணி என்பவர் ஆர்.டி.ஓ., போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்குபோன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற போலீஸ் படை பழனியை குடம், கையுமாக பிடித்துவிசாரித்தது.
அப்போது குப்பன் சொல்லித் தான் குடம் கொடுத்ததாக பழனி கூறியுள்ளார். இதையடுத்து குப்பனும், பழனியும்கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து டெலிவரிக்காக வைக்கப்பட்டிருந்த 280 எவர்சில்வர் குடங்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications