இந்தியாவில் பயிற்சி விமானிகள் காணாமல் போகவில்லை
டெல்லி:
அமெரிக்கா மீது கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய விமானத் தாக்குதலுக்கு பின்னரோ அல்லது முன்னரோஇந்தியாவிலிருந்து எந்த வெளிநாட்டவரும் காணாமல் போயிருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
விசாரணையின் முடிவில் ஜாம்ஷெட்பூர் ப்ளையிங் கிளப் என்ற பெயரில் எந்த விமான பயிற்சி பள்ளியும்கிடையாது என்பது தெரிய வந்துள்ளது. டாடா நகர் ஏவியேசன் கிளப் மற்றும் ஜாம்ஷெட்பூர் கோ-ஆபரேடிவ்பிளையிங் கிளப் என்ற 2 விமானப் பயிற்சிப் பள்ளிகள்தான் இருந்ததாகவும் தெரிய வந்தது.
மேலும், இங்கிருந்து எந்த வெளி நாட்டவரும் காணாமல் போகவில்லை என்றும் விசாரணையின் போதுதெரியவந்தது.
ஜாம்ஷெட்பூர் கோ -ஆபரேட்டிவ் பிளையிங் கிளப் கடந்த 1999ம் ஆண்டே மூடப்பட்டு விட்டது. டாடா நகர்ஏவியேஷன் பள்ளியில் வெளி நாட்டைச் சேர்ந்த 3 பேர் தான் பைலட் பயிற்சிக்காக சேர்ந்தனர்.
ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த சல்லா மோல்வி அகமது என்பவரும், சூடான் நாட்டைச் சேர்ந்த முகமது அல் ஜபீன்என்பவரும் விமான பைலட் பயிற்சி பெற டாடா நகர் ஏவியேஷன் பள்ளியில் தங்கள் பெயரை 1990ம் ஆண்டுபதிவு செய்து கொண்டனர்.
சல்லா மோல்வி அகமது பைலட் பயிற்சியிலிருநத் 1998ம் ஆண்டு விலகிவிட்டார். இவர் 58 மணி நேரமே பைலட்பயிற்சி எடுத்துக் கொண்டார். பயிற்சியிலிருந்து ஜூலை 1999ல் விலகிய முகமது அல் ஜபீன், 60 மணி நேரம்பயிற்சி எடுத்தார்.
இவர்கள் இருவரைத் தவிர, சிரியாவைச் சேர்ந்த ஜமீல் ஹாமோடி என்பவரும் டாடா ஏவியேஷன் கிளப்பில்சேர்ந்தார். ஆனால் அவர் 9 மணி நேர பயிற்சிக்கு பிறகு செப்டம்பர் மாதம் 21ம் தேதி பயிற்சியிலிருந்து விலகி,சிங்கப்பூருக்கு சென்று விட்டார்.
எனவே அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முன்போ அல்லது அதற்கு பிறகோ வெளிநாட்டவர்யாரும் விமான பயிற்சி பள்ளியிலிருந்து காணாமல் போகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications