தலிபான் படைகளுக்குள் பிளவு?
டெல்லி:
தாலிபான் படையில் உள்ள பஸ்டூன் வீரர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையே பெரும் பிளவு ஏற்பட்டுஅவர்களுக்கிடையில் கடும் மோதல் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இருபிரிவினரும் காண்டகார் தெருக்களில் கடும் மோதலில் ஈடுபட்டு வருவதாக தலிபான்களின்எதிர்ப்படையான நார்தர்ன் அல்லயன்ஸ் கூறுகிறது.
இதுகுறித்து பரானுதீன் ரப்பானி அரசின் தூதர் சையது சர்தார் அஹமாதி இன்று டெல்லியில் கூறுகையில்,
காண்டகார் நகரில் இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஆனால் இதற்கானகாரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை.
மேலும் தலிபான்களின் வெளியுறவு அமைச்சர் வகில் அஹமது முட்டாவகிலுக்கும், தலிபான் தலைவர் முகமதுமுல்லா ஒமருக்கும் இடையில் பின் லேடன் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வகில்தலைமறைவாக இருப்பதாகத் தெரிகிறது.
எங்கள் நார்தர்ன் அல்லயன்ஸ் படை ஆப்கானின் வடக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான மஸார்-ஏ-ஷெரீப்ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. எந்நேரமும் அந்நகரத்தை எங்கள் படை பிடித்துவிடும் நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் தலிபான் படையினர் எங்கள் படையில் வந்து இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். இதுவரை சுமார்800 தலிபான் வீரர்கள் எங்கள் படையில் வந்து இணைந்துள்ளனர்.
இவ்வாறு அஹமாதி கூறினார்.
அமெரிக்க விமானத் தாக்குதலில் குடும்பமே பலி
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் ஜாலாலாபாத்திலிருந்து தங்கள் வீட்டைக் காலிசெய்துவிட்டு குடும்பத்துடன் ஒருடிரக்கில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது அமெரிக்க விமானம் குண்டுவீசியதில் அதில் பயணம் செய்தஅனைவரும் கொல்லப்பட்டனர்.
எத்தனை பேர் இந்த டிரக்கில் இருந்தனர் தெரியவில்லை என்றும் கடந்த 24 மணிநேரத்தில் இதுபோன்று 2தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் தலிபான் கல்வி அமைச்சர் அமீர் கான் முஷ்டாகி தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications