For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் பரவும் டெங்குக் காய்ச்சல்-இதுவரை 5 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை நகரில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலுக்கு இதுவரை 5 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதையடுத்துமாநகராட்சி மற்றும் மாநில சுகாதாரத்துறை பொதுமக்களை உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெங்குக் காய்ச்சலுக்கு 5 பேர் வரை இறந்துள்ளனர். டெங்குக் காய்ச்சலைத் தடுப்பது குறித்து மாநகராட்சிசார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  • டெங்குக் காய்ச்சல் வந்தவர்களுக்கு ஆரம்பத்தில், கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூட்டு வலி இருக்கும்.

  • பல் ஈறுகள், மூக்கு, தோல் ஆகியவற்றிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கும்.

  • கொசுக்களால்தான் இந்த காய்ச்சல் வருகிறது.

  • இதற்கு நேரடி மருந்து எதுவும் கிடையாது. கொசுக்கள் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • உபயோகமற்ற டயர்கள், தேங்காய் ஓடுகள், பூந்தொட்டிகள், ஆட்டுக்கல், உரல், காலி டப்பாக்கள், சிமென்ட் தொட்டிகள் போன்றவற்றில் தேங்கிக் கிடக்கும் நீர் மற்றும் தேங்கிக் கிடக்கும் மழை நீர் ஆகியவற்றிலிருந்து இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. எனவே இவற்றை அகற்ற வேண்டும்.

  • நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதே டெங்குக் காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களை உற்பத்தி செய்ய விடாமல் தடுக்கும் ஒரே வழியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X