அதிமுகவில் "மிசா" பாண்டியன்
சென்னை:
சென்னையில் திமுக தலைவர் கருணாநதியைச் சந்தித்து மீண்டும் திமுகவில் சேர்ந்த அடுத்த நாளே, அதிமுகவில்சேர்ந்து தமிழக அரசியலில் ஆச்சரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் முன்னாள் மதுரை துணை மேயர் "மிசா"பாண்டியன்.
மதுரையில் நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாகசேர்க்கப்பட்டார் "மிசா" பாண்டியன். இதையடுத்து அவரைப் போலீஸார் தேடினர். அவர் தலைமறைவானார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த வழக்கு தற்போது நடந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் கொலை வழக்கில் சிக்கியதால் மிசா பாண்டியனை திமுக மேலிடம் கட்சியை விட்டு நீக்கியது.ஆனால் கட்சித் தலைமையுடன் அப்போது கருத்து வேறுபாட்டுடன் இருந்த மு.க.அழகிரி தனது ஆதரவாளரான"மிசா" பாண்டியனை கை விடவில்லை.
மதுரை மாநகராட்சித் தேர்தலில் அவர் உள்பட பல அழகிரி ஆதரவாளர்கள் தேர்தலில் சுயேச்யாைகப்போட்டியிட்டனர். அவர்களில் 6 பேர் வெற்றி பெற்றனர்.
இதற்கிடையே, மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் துணை மேயர் தேர்தலில்சுயேச்சைகள் தயவு இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சுயேச்சைகளுக்கு வலை விரிக்கப்பட்டது. அவர்கள் அழகிரியின் ஆதரவாளர்கள் என்பதால்அழகிரி மூலமே அவர்களை திமுகவில் இணைக்க முயற்சிக்கப்பட்டது.
அழகிரியும் பழையவற்றை மறந்து 3 சுயேச்சைகளை திமுகவில் இணைத்தார். அத்தோடு "மிசா" பாண்டியனையும்கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறு கட்சித் தலைமையிடம் கோரினார். அதற்கு மேலிடம் சம்மதித்ததால், "மிசா"பாண்டியன் இரண்டு நாட்களுக்கு முன்பு கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்தித்து திமுகவில் சேர்ந்தார்.
இந்தச் சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென "மிசா" பாண்டியன் சென்னையில் ஜெயலலிதாவைச் சந்தித்து அவர்முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். அவருடன் 3 சுயேச்சை கவுன்சிலர்களும் அதிமுகவில் இணைந்தனர். இதுதிமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
இனிதான் ஆரம்பம்.. விஜயபாஸ்கர் பலே திட்டம்.. வெளியான ஆடியோ -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications