அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன் பணம் இல்லை
சென்னை:
கடை நிலை ஊழியர்கள் தவிர வேறு எந்த அரசு ஊழியருக்கும் இந்த ஆண்டு தீபாவளி முன் பணம் கிடையாதுஎன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் பண்டிகை முன்பணம் வழங்குவதில் புதிய சிக்கல்ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசிடம் நிதிப் பற்றாக்குறை நிலவிவருவதால், முன்பணம் வழங்கப் படுவதே சந்தேகமாக இருந்து வந்தது.இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) தமிழக அரசின் நிதித்துறை தனிச் செயலாளர் அருள்மொழி ஒரு அறிக்கைவெளியிட்டார்.
அதில் தமிழக அரசு ஊழியர்களில் குரூப் டி ஊழியர்கள், அதாவது அலுவலக ஊழியர்கள் மற்றும் அதற்குக் கீழ்பணியாற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் தீபாவளிக்காக பண்டிகை முன்பணம் வழங்கப்படும் என்றுகூறப்பட்டிருந்தது.
இதனால் இந்த குரூப்-டி ஊழியர்கள் தவிர 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பெல்லாம் ஒரு மாதத்துக்கு முன்பே அரசு ஊழியர்கள் பண்டிகை முன்பணம் கேட்டு விண்ணப்பித்து,ஒரு வாரத்திற்குள் அதற்கான தொகையைப் பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications