பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியம் விற்ற 3 பேர் கைது
டெல்லி:
பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை விற்ற 3 ராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர். இவர்ரளை டெல்லிபோலீசார் கைது செய்தனர்.
அப்துல் சமதுடன் பிரான்சிஸ் பிரகாஷ் மற்றும் பாபுல் நாத் மயூரா ஆகியோரும் நாட்டைக் காட்டிக் கொடுக்கும்செயலில் ஈடுபட்டு வந்துள்ள்ளனர். இந்த இருவரையும் அப்துல் சமத் தான் பாகிஸ்தான் தூதரக அதிகாரிளிடம்அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இவர்களில் சமதும், பிரகாசும் நேற்றி நள்ளிரவில் பாகிஸ்தானிய தூதரக அதிகாரியை சந்திக்கப் போவதாகபோலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள சந்திக்கத் திட்டமிட்டிருந்த இடத்தை போலீசார்கண்காணித்தனர்.
அப்போது அங்கு வந்த சமத், பிரகாஷ், இவர்களிடம் இந்திய ராணுவ ரகசியத்தை பெற வந்த பாகிஸ்தானியஅதிகாரி குலாம் சபீர் கான் ஆகியோரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பாபுல் நாத் மயூரா அருகே ஒரு பாலத்தின் கீழ் இந்திய கடற்படை குறித்தசில ரகசிய கோப்புகளுடன் மறைந்து நின்றிக்கும் விவரம் தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார்அவரையும் கைது செய்தனர்.
இதில் சமத், பிரகாஷ், மயூரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானிய அதிகாரி இந்தியவெளியுறவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர் உடனடியாகஇந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications