ஆப்கானில் நுழைந்த முன்னாள் அமைச்சர் கதி என்ன?
காபூல்:
தலிபான்களுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆப்கானிஸ்தானுக்குள் ரகசியமாய்நுழைந்துள்ள ஆப்கானிஸ்தான் அமைச்சரை தலிபான்கள் தேடி வருகின்றனர்.
முன்னாள் ஆப்கானிஸ்தான் மன்னர் ஷகீர் ஷாவின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராகஇருந்தவர் ஹமீத் கர்ஸாய்.
சில தினங்களுக்கு முன் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு ஆப்கானிஸ்தானின் உர்ஸ்கான் மாகாணத்துக்குள்கர்ஸாய் தனது பாதுகாவர்கள், ஆதரவாளர்களுடன் ரகசியமாய் நுழைந்தார். இவர்கள் நுழைந்ததைத் தெரிந்துகொண்ட தலிபான்கள் இவர்களைத் தேடி ஆரம்பித்துள்ளனர்.
கர்ஸாயுடன் சென்றவர்களில் 12 பேர் தலிபான்களிடம் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இவர்களை தூக்கில்போடப் போவதாக தலிபான்கள் மிரட்டி வருகின்றனர்.
ஆனால், கர்ஸாயும் அவரது பாதுகாவலர்களும் தலிபான்களிடம் இருந்து தப்பி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம்சென்று கொண்டுள்ளனர். இவர்கள் அமெரிக்கா வழங்கிய சாட்டிலைட் போன் மூலம் அமெரிக்க ராணுவத்துடன்தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டுள்ளனர்.
இதனால், இவர்கள் இருக்கும் இடம் அமெரிக்காவுக்கு மட்டுமே தெரியும். தலிபான் வீரர்களிடமிருந்துஇவர்களுக்கு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.
கடந்த வியாழக்கிழமை கர்ஸாயை தலிபான்கள் சுற்றி வளைத்தனர். உடனடியாக விரைந்து வந்த அமெரிக்கஹெலிகாப்டர்கள் தலிபான் வீரர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தின. இதில் 4 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.கர்ஸாய் தனது பாதுகாவலர்களுடன் அந்த இடத்திலிருந்து தப்பிவிட்டார்.
அவரை தலிபான்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இரு வாரங்களுக்கு முன் அமெரிக்கா பேச்சைக் கேட்டு ஆப்கானிஸ்தானுக்குள் ரகசியமாய் நுழைந்த நார்த்தர்ன்அலையன்ஸ் படையினரின் கமாண்டர் அப்துல் ஹக், தலிபான்களிடம் சிக்கி தூக்கில் போடப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications