எல்லையில் மோதல்: இந்திய ராணுவ வீரர் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும், பாகிஸ்தானிய ராணுவத்திற்கும் இடையேஏற்பட்ட சண்டையில் 2 பாகிஸ்தானிய வீரர்களும், ஒரு இந்திய வீரரும் கொல்லப்பட்டனர்.
கராச்சி அருகே உள்ள லிப்ரா பள்ளதாக்குப் பகுதியில் இருந்து, குப்வாரா அருகே உள்ள இந்திய பகுதிகளைநோக்கி பாகிஸ்தானிய படைகள் தாக்குதல் நடத்தின.
சிறு வகை ராக்கெட்டுகள், மார்ட்டர் ரக பீரங்கிகள் போன்றவற்றை அவர்கள் தாக்குதலுக்குப் பயன்படுத்தினர். இதில்ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதேபோல, இந்தியத் தரப்பிலிருந்து பாகிஸ்தானின் ஹாஜிப்பிர் அருகே உள்ள லேரி என்ற ராணுவ முகாம் மீதுதாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், எல்லையைக் கடந்து வந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல்நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இதைமறுத்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,
எல்லையைத் தாண்டிச் சென்று இந்திய வீரர்கள் யாரும் தாக்குதல் நடத்தவில்லை. எதிர்தரப்பில் இருந்து தாக்குதல்வந்தால் ஒழிய, இந்திய வீரர்கள் யாரும் தாக்குதலைத் தொடங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பதில் தாக்குதலுக்கு சாதாரண ஆயுதங்கள் தான் பயன்படுத்தப்பட்டன என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications