குடும்பத்துடன் போராட பஸ் ஊழியர்கள் முடிவு
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அடுத்த கட்டமாக குடும்பத்துடன் போராட்டத்தில் இறங்கப் போவதாகஅறிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் 20 சதவீத போனஸ் கேட்டு, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 3 நாட்களாகவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து 3வது நாளான நேற்று (திங்கள்கிழமை) போக்குவரத்துக் கழகஊழியர்கள் கூடி விவாதித்தனர்.
தொ.மு.ச. பேரவை தலைமையகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:
போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களில் சென்னையைச் சேர்ந்த ஹரிபாபு என்ற நடத்துனர்சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசுக்கு போராட்டக்குழுகண்டனத்தைத் தெரிவிக்கிறது. மறைந்த தோழருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களில் நேற்று மட்டும் 4,000 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்த கைது எண்ணிக்கை 8,000 ஐ தாண்டியுள்ளது.
தொழிலாளர்களின் போராட்டத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, அரசு உடனே 20 சதவீத போனஸ் வழங்கஉத்தரவிட வேண்டும். வீண் பிடிவாதத்தையும், வீம்பையும் கைவிட வேண்டும்.
இல்லையேல் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும். அடுத்த கட்டமாக குடும்பத்துடன் போராடமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications