ஆப்கான் விவகாரத்தில் இந்தியா தலையிடுவது ஏன்?
டெல்லி:
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் நாட்டின் அனைத்துஇனத்தினரையும் கொண்ட புதிய அரசை அமைக்கும் முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கக்கூட்டணி நாடுகளும் மேற்கொண்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் அடுத்த ஆட்சி குறித்துத் தீர்மானிக்க ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடந்த ஜி-21(குரூப்-21) நாடுகளின் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்றது. ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில்இந்தியாவின் பங்கு அதிக அளவில் இருக்கும் என ஐ.நா. கருதுகிறது.
இந்தியவைத் தூண்டிவிட்ட தலிபான்கள்:
நீண்ட நெடுங்காலமாகவே இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு நிலவி வந்தது. ஆனால்,தலிபான் ஆட்சி வந்தவுடன் உறவு சீர் குலைந்தது.
பாகிஸ்தான் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த தலிபான்கள் அந் நாட்டு முன்னாள் அதிபர் நஜீபுல்லாவை அடித்துக்கொன்று தெரு விளக்குக் கம்பத்தில் தூக்கில் போட்டனர். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தான் தனது குடும்பத்தைபத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் நஜீபுல்லா.
இப்போதும் அவரது குடும்பம் டெல்லியில் இந்திய அரசின் பாதுகாப்புடன் வசித்து வருகிறது. அதே போலதலிபான்களால் ஆட்சியைவிட்டு விரட்டப்பட்ட ஜனாதிபதி புர்ஹானுதீன் ரப்பானியும் தப்பி வந்த இடம் இந்தியாதான். இப்படி அந் நாட்டு ஆட்சியாளர்களுடன் நல்லுறவைத் தான் இந்தியா பேணி வந்தது.
ஆனால், தீவிர இந்திய எதிர்ப்புணர்வு கொண்ட தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தான் தொல்லைஆரம்பித்தது. தொடர்ந்து காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் தீவிரவாதத்தைத் தூண்டி வந்தனர் தலிபான்கள்.காஷ்மீரி தீவிரவாதிகளுக்கு பயிற்சி முகாம்களை அமைத்துக் கொடுத்தார் பின்லேடன்.
அல்-காய்தா தீவிரவாதிகளும், தலிபான்களும் தான் பாகிஸ்தானுடன் சேர்ந்து கார்கிலுக்குள் ஊடுருவினர். இந்தியராணுவத்துக்கு எதிராக கடும் போரும் புரிந்தனர்.
அடுத்ததாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தி தீவிரவாதிகளை மீட்டதே தலிபான்கள் தான். கடத்தலுக்குஉதவியது அல்-காய்தா.
இதையடுத்துத் தான் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியது. அவர்களைஆட்சியை விட்டு விரட்ட முயன்று வந்த நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருடன் கைகோர்த்துக் கொண்டது.அவர்களுக்கு நிதி உதவியும் வழங்க ஆரம்பித்தது.
காயமடையும் நார்த்தர்ன் அலையன்ஸ் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க அவர்களுக்கு தஜிகிஸ்தான் எல்லையில்மருத்துவமனையும் கட்டிக் கொடுத்து, இந்திய ராணுவ மருத்துவர்கள் குழுவையும் நிரந்தரமாக அனுப்பியது.தொடர்ந்து மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
ரஷ்ய ஆயுதங்களையும் தனது செலவில் வாங்கிக் கொடுத்தது.
இதனால், நார்த்தர்ன் அலையன்ஸ் தீவிரமாக இந்தியாவை ஆதரித்து வருகின்றனர். இவர்களைஆப்கானிஸ்தானின் அடுத்த ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்க வைக்க இந்தியா விரும்புகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications