காட்டிக் கொடுத்த டேனியேல்
சென்னை:
ராஜகோபாலின் அடியாட்களில் ஒருவரான டேனியல் தங்களை எவ்வாறு ஏமாற்றினார் என்று ஜீவஜோதி விளக்கிக்கூறினார்.
சென்னையில் பிரபல ஓட்டலான சரவணபவன் அதிபர் ராஜகோபால் தன்னிடம் மேனேஜராக வேலை பார்த்தராமசாமி என்பவரது மகளான ஜீவஜோதி என்ற பெண்ணை கட்டாயப்படுத்தி தன்னை மூன்றாவது திருமணம்செய்துகொள்ள வற்புறுத்தினார். ஜீவஜோதி ஏற்கனவே திருமணமானவர்.
மேலும் ராஜகோபால் தனது அடியாட்களை வைத்து அடித்து மிரட்டியுள்ளார். இந்த வேதனையில் இருந்தஅவர்களுக்கு ராஜகோபாலின் அடியாட்கள் கும்பலில் ஒருவரான டேனியல் இவர்களிடம் வந்து மன்னிப்புக்கேட்டுள்ளார்.
டேனியலை தானும் தனது கணவரும் நம்பியதால், அவர் எங்களை ஏமாற்றி மீண்டும் ராஜகோபாலிடம் சிக்கவைத்துவிட்டதாக ஜீவஜோதி கூறினார். டேனியலின் சதி குறித்து அவர் மேலும் கூறியதாவது,
ராஜகோபாலின் ஓட்டலில் வேலை செய்பவர்களான சேது, பாலா, உசேன், டேனியல், கார்மேகம் போன்றவர்களைஅனுப்பி எங்களை மிரட்டினார்.
பிறகு சென்னை அசோக் நகரில் உள்ள சந்திரசேகர் என்பவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து எனதுகணவரை ராஜகோபால் அடித்து உதைத்தார்கள். மேலும் ஊரைவிட்டு ஓடிவிடும்படி மிரட்டினார்.
மறுநாள் டேனியல் மட்டும் எங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்டதோடு, போலீசிடமும் முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவிடமும் புகார் கொடுக்கும்படி எங்களுக்கு ஆலோசனை கூறினார்.
இதையடுத்து கடந்த அக்டோபர் 12ம் தேதி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துவிட்டு நானும் என் கணவரும்ஒரு லாட்ஜில் தங்கினோம். டேனியல் அவ்வப்போது ராஜகோபாலின் நடவடிக்கைகள் குறித்துதொலைபேசியில்தகவல் கொடுத்தார். இதனால் நாங்கள் டேனியலை நம்பினோம்.
இந்நிலையில் ஒரு நாள் சாய்பாபா கோயிலுக்கு அருகே எங்களை வரச் சொன்னார் டேனியல். நானும் எனதுகணவரும் ராஜகோபால் விஷயமாக ஏதோ சொல்லப் போகிறார் என்று எண்ணி அங்கு சென்று காத்திருந்தோம்.
அப்போது முதலில் டேனியல் வந்து எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பிறகு சற்று நேரத்தில் ராஜகோபாலின்அடியாட்கள் திபுதிபுவென வந்து எனது கணவரை தனியாக இழுத்துச் சென்றனர்.
அப்போது தான் எனக்குப் புரிந்தது இது டேனியல் எங்களுக்கு எதிராகச் செய்த திட்டமிட்ட சதி என்று. தெரிந்துஎன்ன செய்வது என்னை நானே தொந்துகொண்டேன். இவ்வாறு ஜீவஜோதி கூறினார்.
முதலில் ராஜகோபாலுக்கு உதவிய டேனியேல் பின்னர் ஜீவஜோதிக்கு உதவியுள்ளார். மீண்டும் அவர் ராஜகோபால்தரப்புக்கு தாவியுள்ளார். அவரை மிரட்டி அல்லது பணம் கொடுத்த ராஜகோபால் மடக்கியிருக்கலாம் என்றுதெரிகிறது. அவரது உதவியுடன் தான் பின்னர் ஜீவஜோதியையே ராஜகோபால் கடத்தியிருக்கிறார்.
அதற்குப் பிறகு ஜீவஜோதியை மட்டும் அழைத்துக்கொண்டு திருநெல்வேலி சென்றிருக்கிறார்கள். மேலும் தற்போதுவரை ஜீவஜோதியின் கணவரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர் தலைமறைவாக இருக்கிறாரா அல்லதுராஜகோபாலின் ஆட்கள் அவரைக் கடத்தி வைத்துள்ளனரா என்று தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications