பாகிஸ்தானில் தலிபான்களின் கடைசி தூதரகமும் மூடல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தானின் கடைசி தூதரகத்தையும் மூடிவிட பாகிஸ்தான் அரசுஉத்தரவிடடுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து கொண்டு தலிபான் ஆட்சியாளர் முகம்மத் முல்லா ஒமரின் கருத்துக்களை ஆப்கானிஸ்தான்தூதர் உலகுக்குச் சொல்லி வந்தார். இந்த தூதரகங்கள் மூலம் தான் வெளியுலகுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் ஒரேதொடர்பு இருந்து வந்தது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தலிபான் அரசின் தூதரகம் அமைந்திருந்தது. இது தவிர பெஷாவர்,குவேட்டா, கராச்சி ஆகிய 3 இடங்களில் துணை தூதரகங்களும் இருந்தன.
இந்த 3 துணைத் தூதரகங்களும் பாகிஸ்தான் உத்தரவுப்படி ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.
இப்போது எஞ்சியிருந்த ஒரே தூதரகத்தையும் பாகிஸ்தான் மூடச் சொல்லிவிட்டது. இது குறித்து பாகிஸ்தான்வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அஸிஸ் அகமத் கூறுகையில்,
தலிபான்களின் கடைசி தூதரகத்தையும் மூடிவிடும் முடிவு நேற்று எடுக்கப்பட்டது. இன்று தலிபான்களிடம்அதிகாரப்பூர்வமான தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்றார்.
பாகிஸ்தானிடமிருந்து தகவல் வரும் முன்பே தங்கள் தூதரகத்தை மூடும் நடவடிக்கைளை தலிபான் தூதரகஅதிகாரிகள் மேற்கொண்டுவிட்டனர். விசா வழங்குவது போன்ற அனைத்து நடவடிக்கைகளும்நிறுத்தப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications