பந்த்தை முறியடிக்க களத்தில் இறங்கினார் வளர்மதி
சென்னை:
பஸ் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தம் தொடர்பாக சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் திருவள்ளூரில் நடந்தது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னையில் பல இடங்களில் ரெளடிகள் துணையுடன் கள்ள ஓட்டுகள், வாக்குப்பெட்டிகளை சேதப்படுத்துதல் என அடாவடியாக நடந்து அனைவரையும் கலங்கடித்தார் வளர்மதி. அமைச்சரே காரில் முன்னால்வர ரெளடிகள் பின்னால் வந்து வன்முறைத் தாண்டவமாடினர்.
இந் நிலையில் சென்னையில் பந்த்தை முறியடிக்கும் பொறுப்பை வளர்மதியிடம் ஜெயலலிதா கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
பந்த்தை முறியடிக்க அதிகாரப்பூர்வமாகவும் பிற வழிளிலும் என்னென்ன நடவடிக்கை எடுப்பது எனபது குறித்து அவர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் வளர்மதி தலைமையில் நடந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல்துறைஅதிகாரிகள், கலெக்டர் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தை முறியடித்து, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத சூழ்நிலையைஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. பஸ்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால்தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பிரயோகிக்கவும் உத்தரவிடப்பட்டது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications