For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கத்திக் குத்து: அமைச்சர் வளர்மதியின் உதவியாளர் மரணம்-

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஜெபராஜின் உதவியாளர் சண்முகசுந்தரம் சிகிச்சைபலனளிக்காமல் வியாழக்கிழமை இறந்தார். இவரை அமைச்சரின் தம்பி மனோகரன் தான் கத்தியால் குத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது,

அமைச்சர் வளர்மதி ஜெபராஜின் உதவியாளராக இருந்தவர் சண்முக சுந்தரம். இவர் நக்கீரன் வார இதழின் மதுரை நிருபராக இருந்தவர்.அமைச்சராக வளர்மதி ஜெபராஜ் பதவியேற்றவுடன் தனது நிருபர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அவருடைய தனி உதவியாளராகமாறினார்.

வளர்மதி ஜெபராஜுக்கும், அவரது தம்பி மனோகரனுக்கும் ஆகாது. நீண்ட நாட்களாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுசரியாகப் பேசிக் கொள்வதில்லை. இந் நிலையில் சண்க சுந்தரத்திற்கும், வளர்மதி ஜெபராஜிற்கும் இடையே ஏற்பட்ட புதிய நெருக்கம்காரணமாக சண்முக சுந்தரம் ஆத்திரமடைந்தார்.

சமீபத்தில் கூலிக் கும்பலுடன் சண்முகசுந்தரத்தின் வீட்டுக்குச் சென்ற மனோகரன், அவரைக் கடுமையாகத் தாக்கினார். கத்தியால் குத்தினார்.இதில் படுகாயமடைந்த சண்முக சுந்தரம் மதுரையில் உள்ள ஒருதனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் வியாழக்கிழமை இறந்தார்.

கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக மனோகரன் உள்ளிட்ட சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சிவழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது கொலை வழக்காக மாற்றப்படும் என்று தெரிகிறது.

வளர்மதி ஜெபராஜ் சமீப காலமாக தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறார். திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த பழனிவேல்ராஜனை மதுரையில் அவரது சொந்தத் தொகுதியிலேயே வென்றதால் அமைச்சர் பதவி கிடைத்தது. பின்னர் அதிகாரியிடம் தனக்கு செருப்புவாங்கித் தரச் சொல்லி பெயர் வாங்கினார். ஒயின்ஷாப் ஏலம் எடுப்பதில் இவரது தம்பி செய்த ரெளடித்தனத்தால் வளர்மதி மீண்டும்செய்திகளில் அடிபட்டார்.

ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சிக்கும் வாரஇதழின் நிருபருக்கு நெருக்கம் இருந்ததால் அதிமுக தலைமையின்அதிருப்திக்கு ஆளானார். சமீபத்தில் மாநில அதிமுக மகளிரணித் தலைவி பதவியை இவரிடமிருந்து ஜெயலலிதாபறித்தார்.

இப்போது தனது உதவியாளரை தனது தம்பியே கொன்றுவிட்ட நிலையில் தடுமாறிப்போய் உள்ளார் அமைச்சர்.விரைவில் இவரது அமைச்சர் பதவியையே ஜெயலலிதா பறித்தாலும் ஆச்சரியப்படுவற்கு இல்லை.

விரைந்தார் வளர்மதி:

சண்முகசுந்தரத்தின் மரணம் குறித்து கேள்விப்பட்வுடன் அமைச்சர் வளர்மதி மதுரைக்கு விரைந்தார். தனியார்மருத்துவமனையில் இருந்த அவரது உடலைப் பார்த்து கதறி அழுதார்.

பின்னர் சண்முகசுந்தரத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X