தெ.ஆப்ரிக்காவுடன் மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 221/8

Subscribe to Oneindia Tamil

சென்சூரியன்:

பரபரப்பான சூழ்நிலையில் இந்திய-தென் ஆப்ரிக்க அணிகளுக்கிடையே சென்சூரியனில் நடைபெற்று வரும்மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள்எடுத்தது.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்ட 6 இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்குதென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரெப்ரீயாக இருக்கும் மைக் டென்னஸ் தண்டனை வழங்கியுள்ளார். இதற்குஇந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதையடுத்து இந்திய-தென் ஆப்ரிக்க நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து, மைக் டென்னசைமூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரெப்ரீ பதவியில் இருந் நீக்கின. அந்த இடத்திற்கு தென்னாப்பிரிக்க அணியின்முன்னாள் கேப்டன் டெனிஸ் லிண்டேயை புதிய ரெப்ரீயாக றியமித்து நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் நாள்ஆட்டம் தொடங்கியது.

இந்தியக் கேப்டன் கங்குலி கழுத்துவலி காரணமாக ஆடவில்லை என்பதால் அவருக்குப் பதில் வெங்கடேஷ்பிரசாத் அணியில் சேர்க்கப்பட்டார். ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தார்.

மேலும் ஆட்டத்திலிருந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட வீரேந்தர் ஷேவாக்குக்குப் பதில் கானர் வில்லியம்சும்,அகர்கருக்குப் பதில் ஆசிஷ் நேஹ்ராவும் அணியில் சேர்க்கப்பட்டனர். கானர் வில்லியம்சுக்கு இதுதான் முதல்சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஷான் பொல்லாக் இந்தியஅணியை பேட் செய்ய அழைத்தார்.

துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தாஸ், வில்லியம்சில் ஆகியோரில் வில்லியம்ஸ் விரைவிலேயேஆட்டமிழந்தார். இதனால் இவர் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறுவது சந்தேகமே.

தாஸ் சற்று நிதானமாக ஆடினார் என்றாலும், உணவு இடைவேளைக்குப் பிறகு விக்கெட்டுகள் மளமளவெனசரிந்தன.

இந்திய அணியின் இளம்புயல் சச்சின் டெண்டுல்கர் 27 ரன்களுடனும், அமைதிப் புயல் டிராவிட் 5 ரன்களுடனும்,லட்சுமண் 14 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். தாஸ் 46 ரன்கள் எடுத்தார்.

அதன் பிறகு ஆடவந்த தாஸ்குப்தா 36 ரன்களும், ஹர்பஜன் 29 ரன்களும், அனில் கும்ளே 27 ரன்களும் எடுத்துஆட்டமிழந்தனர்.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. இன்றுதொடர்ந்து ஆட்டம் நடைபெறும்.

இந்த டெஸ்ட் போட்டியை, ஐ.சி.சி. ஒரு சர்தேச போட்டியாக அங்கீகரிக்காது என்று கூறிவிட்டது. மேலும் இந்தப்போட்டியின் முடிவுகள் மற்றும் வீரர்கள் செய்யும் சாதனைகள் எதுவும் ஐ.சி.சி.யின் குறிப்பேட்டில் இடம்பெறாதுஎன்றும் அறிவித்துள்ளது.

இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டின் தலைவர் ஜக்மோகன் டால்மியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+