For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நள்ளிரவில் கல்பாக்கம் அணு மின் நிலையத்தை சோதனையிட்ட அமெரிக்க உளவு ஹெலிகாப்டர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Helicopterசென்னை நகரின் மீதும், கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் மீதும் அடையாளம் தெரியாத ஒரு உளவு பார்க்கும்ஹெலிகாப்டர் 2 மணி நேரம் பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த ஹெலிகாப்டர் நேற்று சென்னை வந்த அமெரிக்கப் போர்க் கப்பலானயு.எஸ்.எஸ். ஜான் யங்கிலிருந்து புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது.

யு.எஸ்.எஸ். ஜான் யங் ஜப்பானில் இருந்து நேற்று முன்தினம் பகலில் இந்தியா வந்தது. இது ஆப்கானிஸ்தானில்போரில் ஈடுபடுவதற்காக வளைகுடாவுக்குச் செல்ல உள்ளது. இந்தக் கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னைதுறைமுகத்துக்குள் வர அனுமதிக்கப்பட்டது.

ஆனால், இதில் இருந்த ஒரு உளவு பார்க்கும் ஹெலிகாப்டர் நேற்று முன் தினம் நள்ளிரவு 1 மணிக்கு உரியஅனுமதி எதையும் பெறாமல் கப்பலில் இருந்து கிளம்பியது. சென்னை மீது பறந்தது. பின்னர் சென்னைக்குகிழக்காகப் பறந்து சென்ற இந்த ஹெலிகாப்டர் கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் மீது 1 மணி நேரம் பறந்தது.

அணு உலை குறித்த ரகசிய தகவல்களை இந்த ஹெலிகாப்டர் கண்காணித்திருக்கலாம் என்று தெரிகிறது.

அதிகாலை 4 மணியளவில் இந்த ஹெலிகாப்டரை ரேடாரில் பார்த்த சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டுஅறையின் அதிகாரி உடனடியாக அதை ரேடியோ மூலம் தொடர்பு கொண்டார். ஆனால், அவருக்கு பதிலளிக்கஅந்த ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் மறுத்துவிட்டனர்.

நீங்கள் யார், எந்தப் படையைச் சேர்ந்தவர்கள், பறக்க அனுமதி வாங்கியிருகிறீர்களா என்ற கேள்விக்கு இந்தஅமெரிக்க வீரர்கள் எந்த பதிலும் சொல்லாமல் தொடர்ந்து கல்பாக்கம் மீது பறந்தனர்.

இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கும் தாம்பரம் விமானப் படையினருக்கும் தகவல் கொடுத்தார். விமானப்படையினர் நடவடிக்கையில் இறங்கும் நிலை வந்தவுடன் அந்த ஹெலிகாப்டர் உடனடியாக சென்னைதுறைமுகத்துக்குத் திரும்பி வந்தது. ஜான் யங் கப்பலில் தரையிறங்கியது.

இந்த ஹெலிகாப்டர் இந்திய வானில் பறப்பதற்கு விமானப் படை, விமானத் துறை, கடற்படை ஆகியவற்றிடம் முன்அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் இந்த ஹெலிகாப்டர் சென்னை மற்றும்கல்பாக்கம் அணு மின் நிலையத்தை படம் பிடித்துள்ளது.

இது இந்தியாவின் பாதுகாப்புக்கே பெரும் சவாலாகும் என அதிகாரிகள் கருதுகின்றனர். இந்தச் சம்பவத்தை மிகத்தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள ராணுவம் இது குறித்து அமெரிக்காவிடம் கண்டனம் தெரிவிக்குமாறு மத்தியஅரசை வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு அமெரிக்கத் தூதரகத்தையும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்திடமும் இது குறித்து விளக்கம்கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வழக்கமாக வெளிநாட்டு போர்க் கப்பல்களை எந்த நாடும் காரணமின்றி உள்ளே அனுமதிப்பதில்லை. இந்தக்கப்பல்களில் இருக்கும் கருவிகள் தான் இதற்குக் காரணம்.

நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள இடம், கடற்படையினரிடையே ரேடியோ மூலம் நடத்தப்படும்ஆலோசனைகள், தாக்குதல் கப்பல்களின் பலம் ஆகியவற்றை இந்தக் கப்பல்களில் உள்ள கருவிகளால் துல்லியமாகஅளவிட முடியும்.

வழக்கமாக வெளிநாட்டு போர்க் கப்பல்களை தனது நாட்டுக்குள் அனுமதிக்கும் எந்த நாட்டு ராணுவமும்,கடற்படையும் அந்த நேரத்தில் ரேடியோ மூலம் முக்கிய தகவல்களை பரிமாறிக் கொள்வதில்லை. அதே போலநீர்மூழ்கிகளும் இடம் மாற்றப்பட்டுவிடும்.

ஆனால், நட்புறவு என்ற பெயரில் வந்துள்ள இந்த அமெரிக்கக் கப்பலும் நிச்சயம் நம் கடற்படைக் கப்பல்கள்குறித்த தகவல்களை சேகரிக்க முயலும் என்பது இந்தியாவுக்கும் தெரியும்.

ஆனால், இப்படி ஹெலிகாப்டர் மூலம் அணு மின் நிலையத்தையே ஆராய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.இதனால், மத்திய அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சமீபத்தில் ராமேஸ்வரம் கடற் பகுதியிலும், கம்பம் பகுதியிலும் கூட திடீரென வயல்வெளியில் ஹெலிகாப்டர்கள்வந்து இறங்கிச் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹெலிகாப்டர்கள் எங்கிருந்து வந்தன. அவை யாருக்குசொந்தமானவை என்பது குறித்து இதுவரை எந்த விவரத்தையும் மத்திய அரசு வெளியிடவில்லை.

இது குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகளுக்கு மத்திய அரசு மெளனத்த்ை தான் பதிலாகத் தந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X