வீரப்பனை நான் காப்பாற்றியது உண்மைதான்: கோபால்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாருடன் சந்தன வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட நாகப்பா தன் மீது கூறியுள்ளகுற்றச்சாட்டுகளை மறுத்து நக்கீரன் கோபால் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாகப்பா கடந்த ஞாயிற்றுக்கிழமைஅளித்த பேட்டியில், கோபால் மூலம் பல கோடி ரூபாய் காட்டுக்குள் வந்ததாகக்குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல போலீஸ் அதிகாரி ஒருவரும், வீரப்பனோடு சேர்ந்து கோபாலும் பல கோடி ரூபாய்லாபமடைந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
நாகப்பா தனது பேட்டியில் வீரப்பனை நான்தான் காப்பாற்றினேன் என்று கூறியிருக்கிறார். ஆம், அதுஉண்மைதான். வீரப்பனை அவர் கொலை செய்திருந்தால், அவரால் எப்படி வீரப்பனின் ஆட்களிடமிருந்து தப்பிக்கமுடியும்?.
இரு அரசுகளின் தூதுவனாக நியமிக்கப்பட்ட நான், அந்தப் பணியைச் செம்மையாகச் செய்ய வேண்டுமானால்நாகப்பா, வீரப்பனைக் கொல்ல முயன்ற போது, அதைத் தடுத்தது சரியானது தானே?.
மேலும் வீரப்பனுடன் தமிழ்த் தீவிரவாதிகளை அறிமுகப்படுத்தி வைத்தது நான் தான் என்றும், வீரப்பன்கொள்ளைக் கும்பலில் நானும் சிவசுப்ரமணியமும் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.
சிவசுப்ரமணியம் வீரப்பனைச் சந்தித்து 93ம் ஆண்டு தான். நான் வீரப்பனை முதன் முதலாக 96ம் ஆண்டில் தான்சந்தித்தேன். 1997க்குப் பிறகு எந்த ஒரு காரணத்திற்காகவும் நான் அவனைச் சந்திக்கவே இல்லை. பிறகு ராஜ்குமார்கடத்தலின் போதுதான் நான் வீரப்பனைச் சந்தித்தேன்.
அப்போது தான் வீரப்பனுடன் தமிழ்த் தீவிரவாதிகளும் இருப்பதை கண்டோம்.
இந்நிலையில் தமிழ்த் தீவிரவாதிகளை நான்தான் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன் என்று கூறியிருக்கிறார்கள்.
ராஜ்குமார் கடத்தப்பட்டபோது கேசட்டை எனக்கு அனுப்பாமல் வேறு இடத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஒன்பதுகர்நாடக வனத்துறையிரை விடுவித்தபோது இரு அரசுகளுக்கும் அவன் விதித்த கோரிக்கைகளை அரசுகள்நிறைவேற்றவில்லை.
இதனால் அரசுகள் மீதும், அவர்களை மீட்ட என் மீதும் வீரப்பனுக்குக் கோபம். அதனால் தான் கேசட்டை எனக்குஅனுப்பாமல் வேறு இடத்திற்கு அனுப்பினான். இதிலிருந்து தமிழ்த் தீவிரவாதிகளை அவனுக்குஅறிமுகப்படுத்தியது யார் என்பது விளங்கும்.
இவ்வாறு கோபால் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications