For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுகவுடனான பாரதீய ஜனதாக் கட்சியின் உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் வரப் போகும் சட்டசபை இடைத்தேர்தலின்போது மேலும் பெரிதாகும் என்று தெரிகிறது.

இதற்கிடையே திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து முரசொலி மாறனும் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாஇருவரும் பேச்சு நடத்தியுள்ளனர்.

சமீப காலமாக திமுக மற்றும் பாஜகவுக்கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சிக்கு பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு தருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவித்த பின்னர் இது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

திமுகவை கழற்றி விட்டு விட்டு அதிமுகவை கூட்டணிக்கு இழுக்க பாஜக முடிவு செய்திருப்பதாகவும், இதன்துவக்கமாகவே அதிமுகவின் ஆதரவை அக்கட்சி வரவேற்றுள்ளதாகவும் கூறப்படுகிது. ஆனால், இதை பா.ஜ.க.மறுத்து வருகிறது.

இதற்கிடையே வரும் இடைத் தேர்தலின்போது பா.ஜ.க.-திமுக இடையே பிரச்சனை உருவாகும் என்று தெரிறது.

வருகிறகு இடைத் தேர்தல்:
சென்னை சைதாப்பேட்டை மற்றும் மதுரை ஆண்டிப்பட்டி ஆகிய இரு சட்டசபைத் தொகுதிகளுக்கும் அடுத்தஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாபோட்டியிடுவார் என பேச்சு உள்ளது.

சைதாப்பேட்டையில் அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிடுவார். இதற்காக அவரை அதிமுக இப்போதேதயார்படுத்தி வருகிறது.

அவருக்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தென் சென்னை சம்பந்தமானமுக்கியப் பணிகள் அனைத்தையும் சைதை துரைசாமிதான் முன்னின்று பார்த்து வருகிறார்.

திமுகவின் சைதாப்பேட்டைத் தளபதியான சைதை கிட்டுவின் பரம விரோதிதான் இந்த துரைசாமி. இவரிடம் நீண்டகாலமாக இருந்த சைதை தொகுதியை கிட்டுதான் பறித்து திமுக வசம் சேர்த்தார். இத்தொகுதியின் நிரந்தர திமுகவேட்பாளர் இவர்தான்.

தற்போதைய தேர்தலிலும் திமுக சார்பில் சைதை கிட்டுதான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தஇடத்தில்தான் பாரதீய ஜனதாக் கட்சி குறுக்கிடுகிறது.

சைதாப்பேட்டை கேட்கும் பா.ஜ.க.:

சைதாப்பேட்டை தொகுதியை பாரதீய ஜனதா கட்சி தனக்கு ஒதுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது. இதைஆசையாக இல்லாமல், உத்தரவாகவே திமுகவிடம் வைக்க நினைக்கிறது பாஜக.

சைதை தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அரசல் புரசலாக திமுக வட்டாரத்தில் செய்தியை உலவவிட்டுள்ளது பா.ஜ.க. இதைக் கொடுக்காவிட்டால் கூட்டணியிலிருந்து தேவைப்படும்போது அதாவதுதேர்தலின்போது விலகுவோம் என்றும் பா.ஜ.க. தொண்டர்கள் தி.நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பேசிக்கொள்கின்றனர்.

கருணாநிதி கைது, அதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பேரணி, அதில் ஏற்பட்ட வன்முறை, அதனால்பறிபோன உயிர்கள் இத்தனை சம்பவங்களையும் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பந்தாடச்சொன்ன திமுக தலைமை, அதை செய்ய மத்திய அரசு தயங்கியதால் ஆத்திரமடைந்து, மத்திய அமைச்சர் முரசொலிமாறன் மூலமாக கட்டாயம் கொடுத்ததாக பா.ஜ.க. தலைவர்கள் கூறுகிறார்கள்.

கசந்துபோன உறவு:

தங்களுக்கு சாதகமாக இல்லாத மத்திய அரசில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்று மத்திய அமைச்சர்பதவியை ராஜினாமா செய்ய முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் முன் வந்ததாகவும், ஆனால் கருணாநிதி அதைத்தடுத்து விட்டதாகவும் பேச்சு உள்ளது.

அவர்கள் ஏதாவது செய்கிறார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறி அவர்களை கருணாநிதிஅமைதிப்படுத்தியதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்துதான் இருவரும் இன்னும் அமைதியாகஇருக்கிறார்களாம்.

இதைத் தொடர்ந்து திமுக தரப்பு அமைதி காக்கத் தொடங்கியது. பாஜக சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும்அவர்கள் தலையிடுவதில்லை. வாஜ்பாய் சென்னை வந்தபோது அவரை கருணாநிதி சந்திக்க செல்லவில்லை.பேத்திக்கு உடல் நிலை சரியில்லை என்று அதற்குக் காரணம் கூறப்பட்டது. உண்மையில் வாஜ்பாயை சந்திக்ககருணாநிதி விரும்பவில்லை.

பரஸ்பரம் அவமரியாதை:

இதேபோல, கருணாநிதிக்கு பா.ஜ.கவும் போதிய மரியாதை தர மறுக்கிறது. அக் கட்சியின் தலைவர்ஜனா.கிருஷ்ணமூர்த்தி சென்னையில் நடத்திய தனது மகன் திருமணத்துக்கு கருணாநிதியைக் கூப்பிடவேயில்லை.இத் திருமணத்தில் வாஜ்பாய் டெல்லியில் இருந்து வந்து கலந்து கொண்டார்.

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். முன்பு அடிக்கடி கருணாநிதியைச்சந்தித்து வந்து பா.ஜ.க. செயலாளர் இல.கணேசனை அக் கட்சியின் தலைமை தட்டி வைத்துவிட்டது. இதனால்,சமீபகாலமாக இரு தரப்பிலும் சந்திப்புகளே நடக்கவில்லை.

டெல்லியில் புறக்கணிப்படும் மாறன்:
இந்தப் பனிப்போரின் உச்சகட்டமாக, சமீபத்தில் பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தக்குழுவில் முக்கியத் துறையை வைத்திருப்பவரான மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரான முரசொலிமாறனின் பெயர் இடம் பெறவில்லை.

இது திமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டணியிலிருந்து உடனடியாக வெளியேறுவது என்றமுடிவு வரை திமுக தலைமை சென்று விட்டதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவினரின்கோரிக்கைக்கு ஏற்ப கடைசி நேரத்தில் முரசொலி மாறனின் பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால், இக் கூட்டத்தில்மாறன் கலந்து கொள்ளவில்லை.

திமுக அச்சம்:

இத்தனைக் குழப்பத்திற்கு மத்தியிலும் கூட்டணியில் பாஜக இருப்பது திமுகவினருக்கு உரசலாக இருக்கிறதாம்.ஆனால் இப்போது பாஜகவை விட்டு வெளியேறி வந்தால் ஜெயலலிதாவின் கை ஓங்கி விடும் என்றும்அஞ்சுகிறார்களாம். ஏற்கனவே கருணாநிதியின் அதிரடி கைது விவகாரத்தால் அவரது குடும்பத்தினர் அச்சத்தில்தான் உள்ளனர்.

திமுக தொண்டர்கள் இடையே முன்பு போல தீவிர குணம் இல்லை. ஜெயலலிதாவுக்கு எதிரான போராட்டங்களைதிமுக போதிய பலத்துடன் நடத்த முடியவில்லை. இந் நிலையில் மத்தியக் கூட்டணியில் இருந்து வெளியேறும்அடுத்த நிமிடமே ஸ்டாலின் கைது செய்யப்படுவதில் தொடங்கி அனைத்து அடாவடி செயல்களிலும் ஜெயலலிதாஈடுபடுவார் என்று கருணாநிதி குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.

இதனால் தான் மனசுக்கு பிடிக்காவிட்டாலும் கூட்டணியில் தொடர்ந்து கொண்டுள்ளது திமுக.

மாறன்-காங்கிரஸ் முதல்வர் சந்திப்பு:

அதே நேரத்தில் காங்கிரசுக்கும் தூது அனுப்பும் வேலைகளையும் தொடங்கிவிட்டது. ராஜிவ் கொலைக்குப் பின்னர்திமுகவுடன் கூட்டணி சேர காங்கிரஸ் தயாராக இல்லை. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.

ஜெயலலிதாவின் செயல்களால் எரிச்சலடைந்துள்ள சோனியாவும் திமுக விஷயத்தில் இறங்கி வந்துள்ளதாகத்தெரிகிறது. சமீபத்தில் டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது கட்சித் தலைவிசோனியாவுடன் நீண்ட ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து முரசொலி மாறனை அவர் சந்தித்தார். கர்நாடக தொழில்துறை தொடர்பாக இருவரும் பேசியதாகவெளியில் கூறப்பட்டாலும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அடித்தளம் அமைக்கவே இந்தச் சந்திப்பு நடந்ததாகக்கூறப்படுகிறது.

அரசியலில் எத்தனையோ பேரைப் பார்த்து பழகி விட்ட திமுக தலைவர் கருணாநிதி சரியான சமயத்தில் பாஜகவுக்குஅடியைக் கொடுப்பார் என்கிறார்கள் அறிவாயலத் தொண்டர்கள்.

எப்படியோ இந்த இரு கட்சிகள் இடையே நடக்கும் மோதலால் மகிழ்ச்சியில் திளைக்கிறது அதிமுக வட்டாரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X