For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை அருகே சாலையில் நடமாடிய சிங்கம்: பீதியில் மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை-வண்டலூர் அருகே சாலையில் ஒரு சிங்கத்தின் நடமாட்டத்தைப் பார்த்ததாக 2 பேர் கூறியதையடுத்து,அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி கிளம்பியுள்ளது.

வண்டலூர் மிருகக்காட்சி சாலை அருகே உள்ள கேளம்பாக்கம் ரோட்டில் செவ்வாய்க்கிழமை இரவு சிங்கம் ஒன்றுநடமாடியதைப் பார்த்ததாகவும் வாகனச் சத்தத்தை கேட்டதும் மிருகக்காட்சி சாலைக்குள் ஓடி விட்டதாகவும்மிருகக்காட்சி சாலை இயக்குனரிடம் 2 பேர் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மிருகக்காட்சி சாலையை சுற்றி வளைத்தனர். இதுகுறித்து மிருகக்காட்சிசாலை இயக்குனர் பி.சி.தியாகி நிருபர்களிடம் கூறுகையில்:

புகார் வந்தவுடன் அந்த சிங்கத்தை தேடும் பணியில் இறங்கியுள்ளோம். எங்களிடம் கூண்டுகளில் உள்ள சிங்கம்,புலி, சிறுத்தைகளின் ஆகியவற்றின் எண்ணிக்கை சரியாகத்தான் உள்ளது. அந்த சிங்கத்தை வேறு யாராவதுவெளியிலிருந்து இங்கு கொண்டு வந்து விட்டிருக்கலாம்.

இந்த சிங்கத்தைப் பிடிக்க மிருகக்காட்சி சாலையின் உள்ளே 4 இடங்களில் கூண்டுகளை வைத்துள்ளோம். அந்தகூண்டுகளில் இறைச்சிகளையும், ஆடுகளையும் கட்டி வைத்துள்ளோம்.

இன்னும் ஓரிரு நாட்களில் அந்த சிங்கத்தை பிடித்து விடுவோம். அதுவரை மிருகக்காட்சி சாலைகாலவரையறையின்றி மூடப்படும் என்று தியாகி கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X