இலங்கை: நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு நார்வே முயற்சி
கொழும்பு:
இலங்கையில் நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கான அனைத்து முயற்சிகளையும் நார்வே தூதுக்குழுவினர் எடுத்துவருகின்றனர்.
இப்போது இலங்கை அரசு, எதிர்க்கட்சிகளுடம் ஆலோசனை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நார்வேதூதுக்குழு கேட்டு வந்தது. இதற்கிடையில் இலங்கை அரசு விடுதலைப் புலிகள் கோரிக்கையை ஏற்று அவர்கள்ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பொருளாதாரத் தடையை நீக்கியது.
இதற்கிடையே இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் வரும் பிப்ரவரி 24ம் தேதி வரை போர் நிறுத்தத்தைநீட்டித்தன. இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு முன் விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்குமாறு இலங்கைஅரசுக்கு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்தனர்.
புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு ஆதரவாக நேற்று பிரதமர் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் பேசினார்.மேலும் நிரந்தர போர்நிறுத்தத்தை கடைபிடிப்பது பற்றியும் கருத்து கூறியுள்ளார்.
இதற்கிடையில் இலங்கை அரசின் கோரிக்கைகளை எடுத்துக் கொண்டு நார்வே தூதுவர் எரிக் சோல்ஹைம் நேற்றுலண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ஆன்டன் பாலசிங்கத்தை சந்தித்து 3 மணி நேரம்பேச்சுவார்த்தை நடத்தினார்.
நிரந்தர போர்நிறுத்தத்திற்கான ஒப்பந்தத்தை விரைவில் நார்வே தூதுக்குழுவினர் தயாரிப்பர் என்று தெரிகிறது.
நார்வே தூதுக்குழுவின் தலைவரான விடார் ஹெல்கெசன் விரைவில் பாலசிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவார்என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு ஹெல்கெசன் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
இந்நிலையில் நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications