500 கார்கள் அணிவகுக்க மனுத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

தேனி:

ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று தேனி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

எம்.எல்.ஏவாகி ஆண்டிப்பட்டி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகத் தான் இங்கு போட்டியிடுகிறேன்என ஜெயலலிதா கூறினார்.

அவரது வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தேனி நகரம் முழுவதுமே ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து முதல்வர்பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்து அமைச்சர்களும் நேற்றே மதுரை வந்துவிட்டனர்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் காலையிலேயே தேனி வந்துவிட்டனர்.

இந் நிலையில் நேற்று விமானம் மூலம் மதுரை வந்த ஜெயலலிதா பாண்டியன் ஹோட்டலில் தங்கியிருந்துவிட்டுஇன்று காலை கார் மூலம் தேனி புறப்பட்டார்.

500 கார்கள்:

அவரது காரைத் தொடர்ந்து சுமார் 500 கார்களில் அதிமுகவினர் அணிவகுத்து வந்தனர்.

மதுரையில் இருந்து தேனி வரை சாலையின் இரு புறமும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் போஸ்டர்களஒட்டப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான வரவேற்பு வளைவுகளும் வைக்கப்பட்டிருந்தன. சிறிய கட்-அவுட்களும்காணப்பட்டன.

தவர், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை:

தேனி செல்லும் வழியில் உசிலம்பட்டி சென்ற ஜெயலலிதா அங்கு முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்குமாலையணிவித்தார். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர்களை நோக்கி கை அசைத்துவிட்டுஉடனடியாக காரில் ஏறிவிட்டார்

அடுத்ததாக ஆண்டிப்பட்டியில் முதல் வேலையாக எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலையணிவித்தார். அங்கும் அவர்பேசவில்லை. மக்களை நோக்கி கையசைத்துவிட்டு புறப்பட்டுவிட்டார்.

வரவேற்ற பன்னீர்:

பின்னர் தேனி வந்த அவரை நகர எல்லையில் முதல்வர் பன்னீர்செல்வம் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றார்.அந்த இடத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுகவினரும் கூடியிருந்தனர்.

அங்கிருந்து தோழி சசிகலா, முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் பொன்னையன் ஆகியோருடன் தேனி மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்குச் சென்றார்.

அங்கு தேர்தல் அதிகாரி புலமாடனிடம் காலை 11.20 மணிக்கு மனுத் தாக்கல் செய்தார்.

ஜெ. பேட்டி:

இதன் பின்னர் வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

எம்.எல்.ஏவானவுடன் இந்தத் தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன். இதற்காகத் தான் இங்குபோட்டியிடுகிறேன். தமிழகத்தில் அணிகள் மாறி வருவது குறித்து நான் இப்போது ஏதும் கூற விரும்பவில்லை.

இங்கு தேர்தலை நிறுத்த வேண்டும் என கருணாநிதி சொல்கிறார். ஆனால், நான் மக்கள் ஆதரவுடன் இங்குபோட்டியிடுவதை அவர் மறந்துவிடக் கூடாது என்றார்.

போலீஸ் குவிப்பு:

ஜெயலலிதான் வருகையையொட்டி தேனி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடிப் படை போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தேனி மாவட்ட எஸ்.பி. வன்னியபெருமாள், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சத்யமூர்த்தி ஆகியோர் பாதுகாப்புஏற்பாடுகளை கவனித்தனர்.

அதே போல கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மண்டல டி.ஐ.ஜி. ரமேஷ் குடவால் தேனியில் முகாமிட்டு பாதுகாப்புஏற்பாடுகளை கவனித்து வந்தார்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைகிறது.


ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக தங்கத்தமிழ்ச் செல்வனும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இவர்ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர் என்பதுநினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+