காலி பானைகளை சுற்றி கும்மியடித்து பெண்கள் போராட்டம்
உசிலம்பட்டி:
பல மாதங்களாக தண்ணீர் இல்லாமல் தவித்து வரும் கிராம மக்கள் காலி பானைகளை வைத்து கும்மி அடித்துபோராட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி அருகே உள்ளது பண்ணைப்பட்டி கிராமம். இங்கு 3000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்தசில மாதங்களுக்கு முன் இங்கிருந்த இரு போரிங் பம்புகளிலும் தண்ணீர் வருவது நின்றுவிட்டது. நிலத்தடி நீர்வற்றிப் போனதால் இந்த பம்புகளில் தண்ணீரே வரவில்லை.
இதையடுத்து அருகாமை கிராமங்களில் உள்ள கிணறுகளில் இருந்து நீரை எடுத்து உபயோகித்து வந்தனர் இந்தகிராம மக்கள். ஆனால், கடந்த வாரம் இந்த மக்கள் நீர் எடுக்க அண்டை கிராமத்து கிணறு உரிமையாளர்கள் தடைவிதித்துவிட்டனர்.
இதனால் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் பண்ணைப்பட்டி கிராம மக்கள் தவித்து வருகினறனர். இது குறித்துஉசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து இந்த கிராமத்தைச் சேர்ந்த 3000 பெண்கள் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு காலிப்பானைகளுடன் வந்தனர். அந்தப் பானைகளை சுற்றிச்சுற்றி வந்து கும்மியடித்தும் அரசுக்கு எதிராக கோஷம்எழுப்பியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்த கிராமத்துக்கு அருகில் உள்ள ஆண்டிப்பட்டியில் தான் முதல்வராகப் போகும் ஜெயலலிதா போட்டியிடுகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications