அரசு ஊழியர் போராட்டம்: அரசுக்கு ராமதாஸ் அறிவுரை
சென்னை:
வரும் பிப்ரவரி 7ம் தேதியில் இருந்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி போராட்டத்தை வாபஸ் பெறச் செய்ய வேண்டும் எனதமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
12 கோரிக்கைகளை முன் வைத்து இந்தப் போராட்டத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தக்கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்பட்டு அரசால் திடீரென திரும்பப்பெறப்பட்ட சலுகைகள் தான.
எனவே அவற்றைத் திரும்பப் தந்து ஊழியர்களின் போராட்டத்தை வாபஸ் பெறச் செய்ய வேண்டும் என அதில்ராமதாஸ் கூறியுள்ளார்.
பன்னீர் வேண்டுகோள்:
இந் நிலையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளதால் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என ஊழியர்களுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு தான் அரசு ஊழியர்களின் சலுகைகள் தாற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டன. நிதி நிலை சரியான பிறகு இந்த சலுகைகள் திரும்ப வழங்கப்படும். வரும் 7ம் தேதி டெல்லியில்நடக்கும் காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் சங்கர் கலந்துகொள்வார் என்றார்.
ஏற்கனவே, இது குறித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் அரசு அதிகாரிகளும் பேச்சு நடத்தினர். ஆனால், இதுதோல்வியடைந்தது. மீண்டும் இரு தினங்களில் பேச்சு நடக்கலாம் என்று தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications