ஜெயலலிதாவைத் தோற்கடியுங்கள்: ஆண்டிப்பட்டியில் வைகோ பேச்சு
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவைத் தோற்கடிக்குமாறு அத் தொகுதி மக்களிடம் மதிமுக தலைவர் வைகோகோரிக்கை விடுத்தார்.
வைரமுத்துவின் சொந்த ஊரான வடுகபட்டியில் மதிமுக கட்சி அலுவகத்தைத் திறந்து வைத்து வைகோபேசியதாவது:
ஜெயலலிதா ஊழல் செய்யவில்லை என்று நீதிமன்றம் விடுவித்தாலும் மக்கள் மன்றத்தில் நின்ற சொல்கின்ே, 5ஆண்டு காலம் ஜெயலலிதா ஊழல் செய்யவில்லையா?
தமிழக அமைச்சர் குடியரசு தின விழாவில் கூட கலந்து கொள்ளாமல் மரபுகளைப் புறக்கணித்துவிட்டு இரவுநேரங்களில் கூட ஆண்டிப்பட்டியை சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் பணம் அள்ளி வீசிவருகின்றனர். மக்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதை இத் தேர்தல் நிரூபிக்க வேண்டும்.
பஸ், மின்சாரம், தண்ணீர் கட்டணத்தை உயர்த்திவிட்டு இப்போது எந்த முகத்துடன் ஓட்டு கேட்டு வந்துள்ளார்கள்என்று தெரியவில்லை. இது ஜனநாயக மோசடி.
எங்கள் கட்சிக்கு சட்டசபையில் எம்.எல்.ஏவே கிடையாது. ஆனால், 3 எம்.பிக்களை வைத்துக் கொண்டு சேதுசமுத்திரத் திட்டத்தை வாங்கித் தந்தோம். திமுகவுக்கு சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். எதிர்க் கட்சித்தலைவராகப் பணியாற்றும் வாய்ப்பை கருணாநிதிக்கு மக்கள் கொடுத்தார்கள்.
ஆனால், அந்தப் பொறுப்பை ஏற்காமல் மக்களை ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. இதனால் மாற்று சக்தி வேண்டும்என மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த சக்தியாக மதிமுக உருவெடுக்கும். எங்கள் கட்சியில் காலில்விழும் கலாச்சாரம், கட்-அவுட் கலாச்சாரத்துக்கு இடம் கிடையாது.
ஜெயலலிதா வருகிறார் என்பதற்காக பள்ளிக் குழந்தைகள் கையில் அதிமுக கொடிகளைக் கொடுத்து உச்சிவெயிலில் ரோட்டில் வரிசையில் நிற்க வைத்து இருந்தனர் அதிமுகவினர். இந்தக் குழந்தைகள் என்ன அதிமுகஉறுப்பினர்களா? இதைப் பற்றி எல்லாம் ஜெயலலிதாவுக்கு எந்தக் கவலையும் கிடையாது.
ஆண்டிப்பட்டியில் ஆயில் பெயிண்டில் தான் அதிமுகவினர் விளம்பரங்களை வரைந்திருக்கின்றனர். இதற்கு மட்டும்ரூ. 10 கோடி செலவு செய்துள்ளனர்.
தேர்தலுக்குப் பின் அரிசி விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளார் ஜெயலலிதா. அரிசி விலை உயர்வைத் தடுக்கவிரும்பினால் ஜெயலலிதாவைத் தோற்கடியுங்கள்.
இவ்வாறு வைகோ பேசினார். அவரது பேச்சுக்கு அங்கு நல்ல வரவேற்பும் இருந்தது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications