தமிழகத்தில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை:
வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் 3வது நாளாக மிகபலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 2 நாட்கள்நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரத்துக்கும் இலங்கைக்கு இடையில் உருவான இந்த காற்றழுத்தத் தாழ்வுமணடலம் தென்மேற்காக நகர்ந்துகன்னியாகுமரி அருகே நிலை கொண்டுள்ளது.
இதனால் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
மன்னார்குடி, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் மிக பலத்த மழைபெய்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேலும் 2 நாட்களுக்கு பலத்த புயல் காற்றுடன் மழை பெய்யும் வானிலைஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
3 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்காகக் காத்திருந்த சம்பா நெல் நீரில்மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில்மழைக்கு ஒரு வாலிபர் பலியாகியுள்ளார்.
தொடர் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறந்துவிடப்படுவதுநிறுத்தப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications