தரவரிசையில் பன்னீர் கடைசி முதல்வர்: ஜெ.யை குற்றம் சாட்டும் இளங்கோவன்
சென்னை:
நிர்வாகத் திறனற்ற மிக மோசமான முதல்வராக, தர வரிசையில் கடைசி முதல்வராக தமிழக முதல்வர்பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, முதல்வரை பொம்மையாக இயக்குகிற ஜெயலலிதாதான் காரணம்என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கை இந்தியாவில் உள்ள முதல்வர்களை தரவரிசைப் படுத்தி, அந்த வரிசையில்தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு கடைசி இடம் கொடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து இளங்கோவன் நேற்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு கருத்துக் கணிப்பில் நிர்வாகத் திறனறற மிக மோசமான முதல்வராக தமிழக முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டதுகுறித்து தமிழகம் தலை குனிந்து நிற்கிறது.
தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜ் அகில இந்திய அரசியலில் முதல்நிலை தலைவராகப் போற்றப்பட்டார்.மற்ற காங்கிரஸ் முதல்வர்கள் அனைவருமே மாற்றுக் குறையாத ஒப்பற்ற பெருமையைப் பெற்று தமிழகத்துக்குஏற்றம் தந்தனர்.
மறைந்த எம்.ஜி.ஆர். பாரதரத்னா விருது பெருமளவுக்கு பாரதத்தில் சிறந்து விளங்குபவர். அவ்வாறு புகழ் பெற்றதலைவர்கள் அமர்ந்த, தமிழக முதல்வர் நாற்காலிக்கு இன்று களங்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் பொறுப்பினை தற்காலிகப் பதவியாக்கியதும், அவருக்குப் பின்னாலிருந்து அவரைபொம்மையாக இயக்குகின்ற ஜெயலலிதாவும் தான் இதற்கு காரணம்.
இதற்கு தீர்வு காணும் பொறுப்பு தமிழக மக்களிடம் தான் உள்ளது என்று அந்த அறிக்கையில் இளங்கோவன்கூறியுள்ளார்.
பாதிப்பில்லை என்கிறார் பன்னீர்:
கருத்துக் கணிப்பில் கடைசி இடம் கிடைத்தது குறித்து பன்னீர்செல்வத்திடம் நேற்று நிருபர்கள் கேட்டதற்கு, அரசின்சார்பில் தலைமை பொறுப்பை ஏற்று நான் எனது பணியை நல்ல முறையில் செய்து வருகிறேன்.
அதுமட்டுமின்றி தமிழக அமைச்சர்களும் தங்களது பணியை சீரிய வகையில் செய்து வருகின்றனர். நிதி நெருக்கடிஎன்பது முந்தைய திமுக அரசாலும், அவர்களின் நிர்வாக சீர்கேட்டாலும் ஏற்பட்டது.
இதனால் தான் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இது போன்ற செய்தியால் நான் பாதிக்கப்படவில்லைஎன்று பன்னீர் கூறினார்.












Click it and Unblock the Notifications