ஜாதிக் கட்சிக்கு "டாடா": தாய்க் கட்சிக்குப் போகிறார் கண்ணப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தாய்க் கட்சியான அதிமுகவில் விரைவில் இணையவுள்ளார் மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் எஸ்.கண்ணப்பன்.

கடந்த அதிமுக ஆட்சி பதவியிலிருந்து போன பின் கண்ணப்பன் அதிமுகவிலிருந்து விலகினார். சிறிது காலம்அமைதியாக இருந்த அவர் கடந்த சட்டசபைத் தேர்தலையொட்டி மக்கள் தமிழ் தேசம் என்ற பெயரில் புதுக்கட்சியை தொடங்கினார்.

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார்கண்ணப்பன். ஆனால் படுதோல்வி அடைந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதாவும், கண்ணப்பனும் விடுதலை செய்யப்பட்டனர்.இதையடுத்து கண்ணப்பன் போக்கில் மாறுதல் ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் கை ஓங்கி வருவதை உணர்ந்த அவர் பேசாமல் மீண்டும் அதிமுகவில் சேர்ந்து விடலாம் என்றுமுடிவு செய்தார். கட்சியிலும் இதற்கு ஆதரவு காணப்பட்டது.

இதையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கண்ணப்பன் அதிமுகவில் இணைவது குறித்துதீர்மானம் செய்து விட்டார். இதற்கு ஜெயலலிதா தரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் வருகிற 9ம் தேதி மக்கள் தமிழ் தேசம் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடக்கிறது. அப்போதுஅதிமுகவில் இணைவது தொடர்பாக முறையாக முடிவெடுக்கப்படுகிறது. அதன் பிறகு ஜெயலலிதாமுன்னிலையில் கண்ணப்பன் கட்சி அதிமுகவில் இணைகிறது.

எம்.ஜி.ஆர். தொண்டர்களில் முக்கியமானவரான எஸ்.திருநாவுக்கரசு பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துள்ளநிலையில் மற்றொரு முன்னாள் அதிமுக பிரபலமான கண்ணப்பன் அதிமுகவில் இணைவது குறிப்பிடத்தக்கது.

ஆண்டிப்பட்டி தேர்தலுக்குப் பிறகு மேலும் பல பிரபலங்கள் அதிமுகவில் இணையலாம் என அதிமுக வட்டாரத்தில்பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+