கோபியில் பயங்கரம்: மனைவி, 2 மகன்களைக் கொன்றவர் தற்கொலை
கோபிச்செட்டிப்பாளையம்:
மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கோபிச்செட்டிப்பாளையம் ஹோட்டல் ஊழியர் ஒருவர் அவரையும்மகன்களையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பச்சைமலை கிரிவலம் தெருவிலுள்ள குடிசை வீட்டில் வசித்துவருபவர் ராஜா (35). இவரது மனைவி பாப்பாத்தி (30). இவர்களுக்கு சின்னராஜு (10), அஜித் குமார் (2) ஆகியமகன்கள் உள்ளனர்.
சந்தேகப் புத்தி கொண்ட ராஜா, பாப்பாத்தி மீது அடிக்கடி சந்தேகப்பட்டுள்ளார். அவருக்கு வேறு யாருடனோதொடர்பு உள்ளதாகக் கூறி பாப்பாத்தியுடன் அடிக்கடி சண்டை போடுவது வழக்கமாம். இதனால் மகன்கள் மீதும்அவர் ஆத்திரத்துடன் இருந்தார்.
இதனால் பாப்பாத்தியைக் கொலை செய்ய முடிவெடுத்த ராஜா, நேற்று (திங்கள்கிழமை) காலை வீட்டுக் கதவைஉள்பக்கமாக பூட்டிக் கொண்டார். பின்னர் டிவியை சப்தமாக வைத்தார்.
அதன் பின்னர் பாப்பாத்தியை ராஜா அரிவாளால் கழுத்தில் வெட்டிக் கொன்றார். அதேபோலவே தனது 2மகன்களையும் அவர் கதறக் கதற வெட்டிக் கொன்றார். பிறகு தனது கழுத்தையும் வெட்டிக் கொண்டு அவர்தற்கொலை செய்து கொண்டார்.
கோபிச்செட்டிப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தராஜா, வழக்கமாக அதிகாலை 4 மணிக்கே ஹோட்டலுக்குச் சென்றுவிடுவார்.
ஆனால் அன்று காலை 7 மணி ஆகியும் ராஜா வேலைக்கு வராததால் ஹோட்டல் மேனேஜர் அவருடையவீட்டுக்குச் சென்று அவருடைய பெயரைச் சொல்லி அழைத்துப் பார்த்தார். ஆனால் வீட்டிலிருந்து எந்த பதிலும்வரவில்லை. டிவி இயங்கும் சத்தம் மட்டுமே கேட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ராசுவின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுபார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் 4 பேரும் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாககிடந்தது அப்போதுதான் அவர்களுக்குத் தெரிய வந்தது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுசோதனை செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் பச்சைமலை கிரிவலம் தெரு பகுதியில் பரபரப்பு நிலவியது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications