திமிர் அடங்காத பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
தீவிரவாதிகள் விவகாரத்தில் சர்வதேச அளவில் பாகிஸ்தான் மீது நெருக்குதல் அதிகரித்து வந்தாலும் காஷ்மீரில் தீவிரவாதத்துக்குதொடர்ந்து உதவுவோம் என அந் நாட்டு ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இன்று காஷ்மீர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை மக்கள் யாரும் கடைபிடிப்பதில்லை. பாகிஸ்தான்ராணுவம், ஐ.எஸ்.ஐ. அமைப்புகளும், தீவிரவாத, மதவாத அமைப்புகளும் மட்டுமே இந்த தினத்தைக் கடைபிடித்து வருகின்றன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் சட்டடசபையில் இன்று முஷாரப் உரையாற்றினார். அதை பாகிஸ்தான் டிவியும் ரேடியோவும்நேரில் ஒளி-ஒலிபரப்பின.
அப்போது முஷாரப் கூறுகையில்,
காஷ்மீரில் சுதந்திரப் போராட்டத்தை இந்தியா நசுக்குகிறது. அந்தப் போராட்டத்துக்கு (தீவிரவாதத்துக்கு) பாகிஸ்தான்தொடர்ந்துஉதவும். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் காஷ்மீர் தான் முக்கிய பிரச்சனையாக இருந்துவருகிறது என்றார்.
தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக மிகக் கடுமையாகப் பேசினார்.
பாகிஸ்தானில் ஆட்சியில் இருக்க வேண்டுமானால் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாகவும் இந்தியாவுக்கு எதிராகவும்பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐ.எஸ்.ஐ. பதவிக்கும் உயிருக்கும் குண்டு வைக்கும்.எனவே, தான் வழக்கம்போல் முஷாரப் தனது வீர வசனம் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications