For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் வன்முறை தொடர்கிறது- 160 பேர் கொலை: ராணுவம் குவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

அயோத்தி விவகாரத்தால் ரயில் எரிக்கப்பட்டதையடுத்து குஜராத்தில் நேற்று இரவிலிருந்து 160க்கும் அதிகமானமக்கள் கொல்லப்பட்டனர். நேற்று 20 பேர் பலியாகியிருந்தனர்.

இதையடுத்து குஜராத் முழுவதும் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 27 பேர் தூங்கிய நிலையிலேயே அவர்களுடைய வீட்டுக்குள்வைத்து எரிக்கப்பட்டனர். ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எரிந்து கொண்டிருந்த வீடுகளிலிருந்து இதுவரை 58 கருகிய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

குஜராத்தில் பல்வேறு இடங்களில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 7 வன்முறையாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே 13 கம்பெனியைச் சேர்ந்த 3,500 ராணுவ வீரர்கள் குஜராத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தாரியாபூர்,ஷாபூர், ஷாஹிபாக் மற்றும் நரோடா ஆகிய நகர்களில் ராணுவ அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. இதையடுத்துஅங்கெல்லாம் ஓரளவு பதற்றம் குறைந்துள்ளது.

ஊரடங்கு:

இதையடுத்து அகமதாபாத் உள்பட குஜராத்தின் 32 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் வீடுகளை எரிப்பது, துப்பாக்கிச் சூடு, கத்திக் குத்து, கல்வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.இதனால் குஜராத் முழுவதும் பெரும் அச்சமும் கலவர பயமும் பரவியுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த மாநிலஅரசு தடுமாறி வருவதால் இன்று ராணுவம் அங்கு குவிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் இருந்து ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் சிறப்பு விமானங்களில் குஜாராத்தின் பல்வேறுபகுதிகளுக்கும் வந்து இறங்கியவண்ணம் உள்ளனர். பல இடங்களில் ராணுவம் கொடி அணிவகுப்பையும் நடத்திவருகிறது.

அகமதாபாத்தில் மட்டும் வன்முறைக்கு இதுவரை 111 பேர் பலியாகியுள்ளனர்.

முன்னாள் எம்.பி குடும்பமே எரித்துக் கொலை:

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அன்சாரியையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 19 பேரையும் ஒரு கும்பல் வெளியில் இழுத்துப் போட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தது. இது போல நேற்று பல்வேறு இடங்களில் 35 பேர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

தன் குடும்பத்தினரை ஒரு கும்பல் எரிப்பது குறித்து அந்த எம்.பி. போலீசாருக்குத் தகவல் கொடுத்தும் அவர்களால் தடுக்க முடியவில்லை.பெரிய அளவில்வந்த வன்முறைக் கும்பலைத் தடுக்க வெறும் லத்தியுடன் வந்த அந்த போலீசாரால் தடுக்க முடியவில்லை.

அதே போல இன்னொரு இடத்தில் வன்முறைக் கும்பலத்ை தடுக்க முயன்ற போலீஸ்காரர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அவரது உடலைவன்முறைக் கும்பல் ரோட்டில் போட்டு எரித்தது.

பல இடங்களில் வன்முறைக் கும்பல்களைத் தடுக்க போலீசார் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். மாநிலம் முழுவதும் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள்,வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ரோட்டில் நடமாடவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வன்முறைக் கும்பல்கள் தான் சுற்றிவருகின்றன. வாகனங்களே இல்லை. மீறி வரும் வாகனங்களும் எரிக்கப்பட்டு வருகின்றன.

பெர்னாண்டஸ் விரைவு:

நிலைமையைக் கட்டுப்படுத்த மாநில பா.ஜ.க. தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்துபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று அகமதாபாத் விரைந்தார். ராணுவத்தைக் கொண்டுவன்முறையை ஒடுக்குவது குறித்து அவர் முதல்வர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மருத்துவமனைகள், பெட்ரோல் பம்புகள், பால் பூத்கள் கூட மூடப்பட்டுள்ளன. இதனால், பால் கூட கிடைக்காமல்மக்கள் அல்லாடி வருகின்றனர்.

இந் நிலையில் ரயில் எரிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் பந்த் நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத்அழைப்பு விடுத்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகைக்காக பள்ளிவாசல்களில் கூடுவர். இந்தநிலையில் வி.எச்.பியின் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், குஜராத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மசூதிகளில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடக்காதுஎன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X