For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் வன்முறை: 427 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

குஜராத் மாவட்டத்தில் நடந்த வன்முறைக்கு கடந்த 4 நாட்ளில் இதுவரை 427 பேர் பலியாகியுள்ளனர். இதில்போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு மட்டும் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டதில் 58 ராம பக்தர்கள் எரிந்து சாம்பலானதைத் தொடர்ந்து குஜராத்தில்பயங்கர வன்முறை ஏற்பட்டுள்ளது.

அகமதாபாத் நகரத்தில் மட்டும் 213 பேர் பலியாகிள்ளனர். இதில் 30 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில்பலியாகியுள்ளனர். அகமதாபாத் நகரத்தில் உள்ள நரோடா, பாபுநகரில் எரிந்த வீடுகளில் இருந்து இன்னும்பிணத்தை எடுத்த வண்ணம் உள்ளனர்.

குஜராத் மாவட்டத்தில் சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இன்னும் 47 இடங்களில் தொடர்ந்துஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்னமும் தெற்கு, வடக்கு, மத்திய குஜராத்தில் வன்முறை தொடர்கிறது.

பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியோதர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு மட்டும் 6 பேர் வன்முறைக்குப்பலியாகினர். இதில் 2 பேர் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியாகினர்.

சூரத்தில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

இதற்கிடையே குஜராத் மாவட்டம் சூரத்தில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

சூரத்தில் ஊரடங்கு அமலில் உள்ள 9 காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலைராணுவத்தினரின் அடையாள கொடி அணிவகுப்பு நடந்தது.

இன்று அதிகாலை சூரத்தில் கிழக்குப் பகுதிகளில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனங்கள் மீது வன்முறை கும்பல்தாக்கியதால், கும்பலை கலைக்க போலீசார் 64 ரவுண்டுகள் வானத்தை நோக்கி சுட்டனர்.

இதைத் தொடர்ந்து வன்முறை கும்பல் கலைந்து சென்றது. இந்தப் பகுதிகளில் கலவர கும்பலை கலைப்பதற்காகபோலீசார் 322 கண்ணீர் புகை குண்டுகள், 22 கிரானைட் வெடிகுண்டுகளையும் வைத்திருந்தனர்.

நேற்றிரவு சூரத்தில் மட்டும் வன்முறைக்கு 8 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் குஜராத்தில் முஸ்லிம், இந்துக்கள் கலவரம் மேலும் வெடிக்காமல் இருப்பதற்காக, பாகிஸ்தான் டிவிசேனல்களை ஒளிபரப்ப குஜராத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் அத்வானி

இதற்கிடையே வன்முறை குறித்து குஜராத் அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளை நேரடியாகப்பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி இன்று அகமதாபாத்துக்கு விரைந்தார்.

கலவர நிலவரம் குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மூத்த போலீஸ், ராணுவ அதிகாரிகளிடம் அத்வானிஆலோசனை நடத்தினார்.

பின்னர் மருத்துவமனைக்குச் சென்று கலவரத்தில் காயமடைந்தவர்களைச் சந்தித்து அத்வானி ஆறுதல் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X