பிரபாகரனை சந்திக்க தூதுக் குழு வன்னி பயணம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

நிரந்தர சண்டை நிறுத்தத்தை கண்காணிக்கும் சர்வதேச கண்காணிப்புக் குழுவினர், விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்காக வன்னி காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிளுக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து நார்வேதலைமையிலான சர்வதேச கண்காணிப்புக்குழு இலங்கை சென்றுள்ளது.

இந்த கண்காணிப்புக்குழுவுக்கு ஓய்வு பெற்ற நார்வே ராணுவ தளபதி டிராண்ட் தலைைமை தாங்கியுள்ளார். மேலும்இலங்கை அரசு மற்றும் புலிகளின் சார்பில் உறுப்பினர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.

கண்காணிப்புக் குழு தலைவர் டிராண்ட், இலங்கை பிரதமர் ரணிலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காகஞாயிற்றுக்கிழமை வன்னிப்பகுதிக்கு சென்றுள்ளார். அவருடன் துணை தளபதி ஹாக்ரப் ஹாக்லாண்டும்சென்றுள்ளார்.

பிரபாகரன், விடுதலைப்புலிகளின் அரசியல் குழுத் தலைவர் தமிழ்செல்வன், விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுதளபதி பொட்டு அம்மன், துணை தளபதி பால்ராஜ், கடல் புலிகளின் தளபதிகள், தளவாட பிரிவு தளபதி, பெண்புலிகளின் தளபதி உட்பட பலரையும் இக் குழுவினர் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.

இந்தியாவின் பங்கு:

இதற்கிடையே இலங்கையில் அமைதிக்கான நடவடிக்கையில் இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என அந்நாட்டு அரசு கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் டைரோன் பெர்னாண்டோ கூறியதாவது:

இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதற்காக இந்தியாவின் முழு ஒத்துழைப்பை அரசு எதிர்பார்க்கிறது. இந்தியாவின் ஒத்துழைப்பின்றி இலங்கையில்அமைதி ஏற்படுவது சாத்தியமல்ல.

நிரந்தர சண்டை நிறுத்தத்தை இந்தியா வர வேற்றுள்ளது. ஆனால் இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் இந்தியாவில் பேச்சு நடத்துவது குறித்து இந்தியஅரசு இது வரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று டைரோன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+