சட்டசபைக்கு வந்தால் கருணாநிதிக்கு முழு பாதுகாப்பு: காளிமுத்து உறுதிமொழி
சென்னை:
கருணாநிதி சட்டமன்றத்திற்கு வர வேண்டும், அவ்வாறு வந்தால் அவருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றுசட்டசபை சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
இன்று காலை சபாநாயகர் அறையில் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்ட பின் சபாநாயகர் காளிமுத்துநிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபை கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி கூடும். 11ம் தேதி வரை நடக்கும்.
சட்டமன்றத்திற்கு கருணாநிதி வந்து விவாதங்களில் பங்கு கொள்ள வேண்டும். இது குறித்து அவருக்கு பல முறைநினைவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் சட்டமன்றத்திற்கு வந்தால் முறையான முழு பாதுகாப்புஅளிக்கப்படும்.
அவர் சட்டமன்றத்திற்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து இப்போது கூற முடியாது.நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
திருநாவுக்கரசின் எம்.ஜி.ஆர். அதிமுக தற்போது பா.ஜ.கவில் சேர்ந்து விட்டதால் அந்தக் கட்சியைச் சேர்ந்தஎம்.எல்.ஏ. அரசன் தனக்கும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் அமரும் இடத்தில் இடம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதுகுறித்து கட்சி அலுவலகத்தில் கடிதம் வாங்கி சமர்ப்பிக்கும் படி கூறியுள்ளேன். அவர் கடிதத்தை கொடுத்தால் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜ்யசபா எம்.பிக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி முடிவடைகிறது. 17ம் தேதிவேட்பு மனுத்தாக்கல் பரிசீலனை செய்யப்படும். 18ம் தேதி வேட்பு மனுத்தாக்கலை வாபஸ் பெறலாம். 27ம் தேதிதேர்தல் நடத்தப்படும் என்று காளிமுத்து கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications