போலி வாக்காளர்களை நீக்கும் பணி தொடங்கியது
சென்னை:
சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் வாக்காளர்கள் சரி பார்க்கும் பணி இன்று தொடங்கியது.
பிப்ரவரி மாதம் 21ம் தேதி சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதாகஇருந்தது. ஆனால் இரு தொகுதிகளிலும் 15,000 மேற்பட்ட போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுகபுகார் கூறியது. ஆண்டிப்பட்டியிலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டியது.
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் 3 தொகுதிகளிலும் ஆய்வு நடத்தியது. இதில் ஆண்டிப்பட்டியில் முறைகேடுநடக்கவில்லை என்று கூறிவிட்டு மற்ற 2 தொகுதிகளிலும் போலியாக ஆயிரக்கணக்கான வாக்காளர்கள்நடத்தப்பட்டுள்ளதை உறுதி செய்தது. இதையடுத்து தேர்தலை தள்ளி வைத்தது. ஆண்டிப்பட்டியில் தேர்தலைநடத்தியது.
இந்த இரு தொகுதிகளலும் போலி வாக்காளர்களைக் கண்டறிந்து நீக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம்மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த 2 தொகுதிகளிலும் இன்று வாக்காளர் சரிபார்க்கும் பணி தொடங்கியது. சென்னைசைதாப்பேட்டையில் வருவாய்துறை, மாநகராட்சியை சேர்ந்த 630 ஊழியர்கள் இந்த வாக்காளர் பட்டியலைசரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் வரும் 8ம் தேதி வரை இந்தப் பணியில் ஈடுபடுவர். தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி இப் பணிநடைபெறும். வீடு வீடாக சென்று பட்டியலில் இருப்பவர்கள், இருக்கிறார்களா என்று இவர்கள் விசாரிப்பர்.போலியாக யாராவது சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களது பெயர் நீக்கப்படும்.
இதே போல் வாணியம்பாடியிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications