சங்கராச்சாரியாரின் திட்டத்துக்கு வீரமணி கண்டனம்
சென்னை:
அயோத்திப் பிரச்சினை தீர காஞ்சி சங்கராச்சாரியார் கொடுத்துள்ள புதுத் திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பைஅவமதிப்பதாக அமைந்துள்ளது என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அயோத்தியில் பிரச்சினை இல்லாத இடத்தை ராம ஜென்ம பூமி குழுவிடம் ஒப்படைக்கலாம் என்று முஸ்லீம் மதத்தலைவர்களுக்கு காஞ்சி ஜெயந்திரே சங்கராச்சாரியார் யோசனை வழங்கியுள்ளார். இது உச்ச நீதிமன்றம் விதித்ததீர்ப்பை அவமதிப்பதாக அமைந்துள்ளது.
1994ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அயோத்தியில் எந்த இடமும் மாற்றப்படக் கூடாது. அப்படியேநீடிக்க வேண்டும். கோர்ட்டின் இறுதியான தீர்ப்பு வரும் வரை அயோத்தியில் குறிப்பிட்ட இடத்தில் எந்தவிதமானசெயல்பாடுகளும், மாறுதல்களும் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.
இதை மீறுவது போல உள்ளது சங்கராச்சாரியார் கொடுத்துள்ள புதிய யோசனை என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications