அயோத்தியில் பதற்றம்: தமிழக கோவில்களில் வெடிகுண்டு சோதனை
மதுரை:
அயோத்தியில் தற்போது பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கியமானகோவில்களில் வெடிகுண்டு சோதனை இன்று (வெள்ளிக்கிழமை) நடந்து வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள்.
மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாயின் சோதனைக்குப் பிறகே பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவிலுக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமான வெடிகுண்டு சோதனையும்நடத்தப்பட்டது.
கோயம்புத்தூரில் உள்ள முக்கியமான கோவில்களுக்கும் மசூதிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. மேலும் இங்கு பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளிலும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கமன்னார் திருக்கோவிலிலும் இன்று வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
இவை தவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட முக்கிய நகரங்களில் உள்ள கோவில்களிலும் வெடிகுண்டுசோதனைகள் நடத்தப்பட்டன.
முக்கியமாகக் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதோடு, அங்கு பலத்தபாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை ரயிலில் வெடிகுண்டு புரளி:
இதற்கிடையே சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்குச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது.
இதையடுத்து வழியிலேயே அந்த ரயில் நிறுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசாரால்சோதனையிடப்பட்டது.
ஆனால் அந்த ரயிலில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததையடுத்து, அந்தத் தகவல் வெறும் புரளி என்று தெரியவந்தது.
இந்தப் புரளியால் சென்னை-ஜோலார்பேட்டை ரயில் மார்க்கத்தில் இன்று காலை சுமார் 4 மணி நேரத்திற்கு ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications