திமுகவினர் வீடுகளில் ரெய்ட் நடத்தியது சரியே: சுவாமி சொல்கிறார்
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது சரியானநடவடிக்கைதான் என்று ஜனதா கட்சித் தலைவரான சுப்பிரமணியம் சுவாமி இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:
திமுகவின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தியிருப்பதில் தவறேதும் இல்லை.
வெறுமனே அனுதாபத்திற்காக வேண்டுமானால் இந்தச் சோதனையை எதிர்த்து அறிக்கை விடலாம். ஆனால் நான்அவ்வாறு கூற விரும்பவில்லை.
முன்னாள் திமுக அமைச்சர்கள் அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளனர் என்பது உண்மைதான். அந்தமான்,மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் எல்லாம் அவர்களுக்குச் சொத்துக்கள் உள்ளன.
இப்படி சோதனைகள் நடத்தினால்தானே உண்மைகள் அனைத்தும் வெளிவரும். கருணாநிதியும்இவற்றையெல்லாம் எதிர்ப்பது போலவே தெரியவில்லை. வீட்டில்தானே அவர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்என்றார் சுவாமி.
மதுரை அருகே அல்-உம்மா கைதிகள் தப்பிய சம்பவம் குறித்து கேட்டபோது, போலீசாரின் அலட்சியம்காரணமாகவே அந்தக் கைதிகள் தப்பியுள்ளனர் என்று சுவாமி பதிலளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications