சென்னை மாநகராட்சி கார்களை திரும்ப ஒப்படைத்தார் ஸ்டாலின்
சென்னை:
சென்னை மாநகராட்சி கார்களை ஆணையரிடமே மேயர் மு.க. ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை)ஒப்படைத்தார்.
ஸ்டாலினுக்கும், துணை மேயர் கராத்தே தியாகராஜனுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் ஆரம்பத்தில்இருந்தே தகராறு இருந்துவருகிறது.
அதில் ஒன்றாக, மேயர் காரில் இருக்கும் மாநகராட்சி கொடி மற்றும் சின்னத்தை தனது காரிலும் பொருத்திக்கொண்டார் கராத்தே தியாகராஜன்.
மேயர் பயன்படுத்தும் கொடி மற்றும் சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. எனவே துணை மேயரின்காரிலிருந்து இவை அகற்றப்பட வேண்டும் என்று ஸ்டாலின் தமிழக அரசிடம் புகார் செய்தார். இருப்பினும் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
துணை மேயர் தனது அதிகாரப்பூர்வ காரில் மாநகராட்சி கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்தலாம், அதில்தவறில்லை. முன்னாள் ஆணையர் ஆச்சார்யலுவின் அனுமதியின் பேரில்தான் இதைப் பயன்படுத்துகிறேன் என்றுகராத்தே தியாகராஜன் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதையடுத்து மாநகராட்சி தனக்கு வழங்கியுள்ள காரைப் பயன்படுத்த மாட்டேன் என்று மேயர் ஸ்டாலின்அறிவித்தார். அதுபோலவே தனது சொந்தக் காரிலேயே மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் துணை மேயரின் காரிலிருந்து மாநகராட்சி கொடி மற்றும் சின்னம் அகற்றப்படாததைக் கண்டித்து,தனக்கு வழங்கப்பட்ட 2 அரசுக் கார்களை மாநகராட்சி ஆணையர் பொறுப்பு வகிக்கும் கார்த்திக்கிடம்வெள்ளிக்கிழமை திரும்ப ஒப்படைத்தார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications