மதுரையில் ரூ.4.64 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

டி.டிக்களை (கேட்புக் காசோலைகளை) திருடி தனது கூட்டாளிகள் உதவி மூலம் ரூ.4.64 லட்சம் மோசடி செய்தஸ்டேட் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மதுரை ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணியாற்றிய ஒருவர், அங்கிருந்த டி.டி.க்களை திருடி தனது கூட்டாளிகளின்பெயரை நிரப்பி வேறு கிளைகளில் பணத்தை பெற்று ரூ.4.64 லட்சம் மோசடி செய்துள்ளார்.

கடந்த 2001 நவம்பரிலிருந்து கடந்த பிப்ரவரி வரை இவர் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். பிறகிளைகளில் இருந்து மதுரை கிளைக்கு, டி.டி.க்கான பணம் கேட்டு கடிதம் வந்த போதுதான் இந்த மோசடி தெரியவந்துள்ளது.

இதன் பிறகு பேங்க் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த ஊழியரின் வீட்டை போலீசார் சோதனைசெய்தனர். அப்போது 201 வெற்று டி.டிக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்து, அவருடைய கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+